கன்னட பிரசாத்தின் கூட்டாளி-விபச்சார புரோக்கர் சோனாலட்சுமிக்கு குண்டாஸ்

சென்னையைக் கலக்கி வந்த பிரபல விபச்சார புரோக்கர் கன்னட பிரசாத். இவர் வசம் இல்லாத பெண்களே இல்லை என்று கூறும் அளவுக்கு சாதாரண அழகிகள் முதல் சில நடிகைகள் வரை ஏகப்பட்ட பேர் இருந்தனர்.
பிரசாத்தின் நெருங்கிய தோழியாகவும், கூட்டாளியாகவும் இருந்தவர் சோனாலட்சுமி. துணை நடிகையாக சில படங்களில் நடித்துள்ள சோனாலட்சுமி பின்னர் லாபம் தரும் விபச்சாரத்துக்கு மாறினார்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக சோனாலட்சுமியின் விபச்சாரக் கொடி தங்கு தடையின்றி பறந்து வருகிறது. பெண் கன்ன பிரசாத் என்று கூறும் அளவுக்கு பிரசாத்தையே தூக்கி சாப்பிடும் வகையில் தொழில் நடத்தி வந்தார் சோனாலட்சுமி.
ஆடம்பர பங்களாக்கள், அடுக்குமாடிக் குடியிருப்புககளில் விபச்சாரம் நடத்தி வந்தார். இவர் 3 முறை கைதானவர். குண்டர் சட்டத்தின் கீழும் இரு முறை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகளின் தயவால் வெளியில் வந்து சுதந்திரமாக தொழில் நடத்தி வந்தார்.
இவருடைய தம்பி சந்திரமோகன் ரெட்டி. இவரும் ஒரு புரோக்கர்தான். சமீபத்தில் நடந்த ஒரு வேட்டையின்போது ரெட்டி மட்டும் சிக்கினார். அவரது அக்கா சோனா தப்பி விட்டார்.
இந்த நிலையில், சென்னையை புறநகர் பகுதிகளில் விபசார கும்பல் சுற்றுவதாக சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட்டிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்பேரில், புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் ஜெயகுமார் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை போலீசார் சென்னை புறநகரில் மாறுவேடங்களில் கண்காணித்தனர்.
கடந்த 10ம் தேதி காரில் சென்ற விபசார கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் சோனாலட்சுமி, அவரது கூட்டாளிகளான ரோஷன், வெங்கடேஸ்வரலு, சாய் சிவா, பெத்தண்ணா, தேவ் ராய் ஆகியோர் இருந்தது தெரிய வந்தது.
2 முறை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டவர் என்பதால் சோனா லட்சுமியை மீண்டு் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உதவி ஆணையர் ஜெயக்குமார், கமிஷனர் ஜாங்கிட்டுக்கு பரிந்துரைத்தார்.
இதைத் தொடர்ந்து சோனாலட்சுமி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications