ஊழியர்களுக்கு சம்பளம் தராத கப்பல் சிறைபிடிப்பு!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி:ஊழியர்களுக்கு சம்பளம் தராத சரக்கு கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தில் சிறை பிடிக்கப்பட்டது.

தூத்துக்குடி துறைமுகத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த எம்.வி.வினாளின் ஐலேண்ட் என்ற கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் வேலை செய்து வரும் ஊழியர்களுக்கு கடந்த சில மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இது தவிர கப்பலில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சரியாக உணவு வழங்கப்படவில்லை என தொழிலாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டபட்டுள்ளது. இது குறித்து கப்பல் உரிமையாளருக்கு தந்தி அனுப்பியும் எந்த பலனும் இல்லை என்று கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு கப்பல் நிர்வாகம் சார்பில் வழங்க வேண்டிய சம்பள தொகை ரூ.15,82,725யை உடனே வழங்க வேண்டும் என்று ராஜேஷ் குமார் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்தக் கப்பல் சரக்குகளை இறக்கிவிட்டு புறப்படத் தயாராக இருந்த நிலையில் இந்த மனு நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதி தனது உத்தரவில் துறைமுகத்தில் உள்ள எம். வி.வினாளின் ஐலேண்ட் கப்பலை சிறை பிடிக்க உத்தரவிட்டார்.

நீதிபதியின் உத்தரவின்படி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த கப்பலை அதிகாரிகள் சிறை பிடித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+