பெட்ரோல் விலை குறைகிறது?
டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடும் சரிவுக்குள்ளாகி வருவதால், இந்தியாவில் பெட்ரோல் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3-ம் டீஸலுக்கு ரூ.2-ம் குறைக்கப்பட உள்ளதாக பெட்ரோலியத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 148 டாலர் என உச்சத்திலிருந்த போது இந்திய பெட்ரோல் நிறுவனங்களும் விலையைக் கடுமையாக உயர்த்தின. பின்னர் விலைக் குறையத் தொடங்கினாலும், இந்தியாவில் பெட்ரோலே – டீஸல் விலை மட்டும் குறைக்கப்படவே இல்லை. இதுகுறித்து பதிலளிக்கையில், இப்போதைக்கு விலைக்குறைப்பு கிடையாது என்றும், கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை ரூ.3000 எனும் அளவுக்கு வந்தால் குறைப்பது பற்றி யோசிக்கலாம் என்றும் பெட்ரோலிய அமைச்சகம் கூறிவந்தது.
ஆனால் இப்போது கச்சா எண்ணெய் விலை ரூ.2500க்கும் கீழ் சரிந்துவிட்டது. ஆனாலும் இந்தியாவில் விலைக் குறைப்பு பற்றி பேசுவதையே பெட்ரேலிய அமைச்சகம் தவிர்த்து வந்தது. இப்போது வேறு வழியின்றி விலைக் குறைப்பை அறிவிக்க தயாராகி வருகிறது. ஆனால் பெரிய அளவில் விலையைக் குறைக்காமல், பெட்ரோல் மற்றும் டீஸல் லிட்டருக்கு இரண்டு அல்லது மூன்று ரூபாய் வரை மட்டும் குறைக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications