தலப்பாகட்டு பிரியாணி பிராண்ட் வழக்கில் இடைக்கால தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி என்ற பெயரை பயன்படுத்துவதை எதிர்த்து சென்னை பிரியாணிக் கடை மீது தொடரப்பட்ட வழக்கில், இடைக்கால உத்தரவு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

திண்டுக்கல்லில் உள்ள தலப்பாக்கட்டு நாயுடு ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல் வெகு பிரசித்தமானது. நூறாண்டு காணும் இந்த ஹோட்டல் பிரியாணி திண்டுக்கல்லையும் தாண்டி பிரபலமானது.

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த தலப்பாக்கட்டு அன்ட் பாஸ்ட் புட் என்ற ஹோட்டல், தலப்பாக்கட்டு பிரியாணி என்று விற்பனை செய்ய ஆரம்பித்தது.

இதையடுத்து திண்டுக்கல் தலப்பாக்கட்டு ஹோட்டல் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த தனி நீதிபதி, சென்னை நிறுவனம், தலப்பாக்கட்டு பிரியாணி என்ற பெயரில் பிரியாணி விற்க இடைக்காலத் தடை விதித்தது.

இதை எதிர்த்து சென்னை நிறுவனம் அப்பீல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மிஸ்ரா, குலசேகரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர்.

அதன்படி, சென்னை நிறுவனம் தனது பிரியாணிக்கு, சென்னை ராவுத்தர் தலப்பக்காட்டு பிரியாணி என்று பெயரிட்டு விற்கலாம்.

இது ஒரு இடைக்கால உத்தரவுதான். தனி நீதிபதி, இந்த வழக்கை விரைவில் - அதாவது 3 மாதத்திற்குள் விசாரித்து, வழக்கின் தன்மை அடிப்படையில் தீர்ப்பினை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+