சட்டக் கல்லூரி மாணவர்கள் டிஸ்மிஸ் கோரி 'டிராபிக்' ராமசாமி வழக்கு
சென்னை: சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை டிஸ்மிஸ் செய்யக் கோரி சென்னை பொது நல சேவகர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். சிபிஐ விசாரணைக்கும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ராமசாமி தாக்கல் செய்துள்ள பொது நலன் மனுவில், கடந்த 12-ந் தேதி சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரியில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. வன்முறை தாக்குதல் காரணமாக 4 மாணவர்கள் காயம் அடைந்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.
வீடியோ காட்சிகள் மூலம் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் யார் என்பதை கண்டறிய பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்.
இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினேன். வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களை கண்டறிந்து, அந்த மாணவர்களை கல்லூரியிலிருந்து டிஸ்மிஸ்' செய்ய வேண்டும். இதன்மூலம் மற்ற கல்லூரி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.
சம்பவத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போலீஸ் அதிகாரிகளையும், கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்களையும் பதவியிலிருந்து டிஸ்மிஸ்' செய்யவேண்டும். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications