டி.எச்.எல்.-இந்தியாவில் ஆள் குறைப்பு இல்லை

சமீப காலமாக பிசினஸில் தேக்க நிலை காணப்பட்ட போதிலும் கூட ஆள் குறைப்புத் திட்டம் தங்களிடம் இல்லை எனவும் அது தெளிவுபடுத்தியுள்ளது.
பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் புதிய பிரிவு ஒன்றை தொடங்கியுள்ளது டி.எச்.எல். நிறுவனம். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிறுவனத்தின் அதிகாரி ஒருவர்,
எங்களது நிறுவனத்தின் நிதி நிலைமை ஸ்திரமாக உள்ளது. தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை எளிதில் சமாளிக்க முடியும்.
எனவே இந்தியாவில் இப்போது ஆள் குறைப்பு செய்யும் திட்டம் எங்களிடம் இல்லை.
இந்தியாவில் 1983ம் ஆண்டு முதல் நாங்கள் பிசினஸில் இருக்கிறோம். நன்கு வளர்ந்திருக்கிறோம். ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். இருப்பினும் நாங்கள் இருப்பது சேவைத்துறை என்பதால் ஆள் குறைப்பு சாத்தியப்படாது.
நிறுவனத்தின் வளர்ச்சியில் அதன் ஊழியர்களும் ஒரு அங்கம். எனவே அவர்களை வீட்டுக்கு அனுப்புவது என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது.
எங்களது நிறுவனத்தில் 10 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர். விரைவில் பொருளாதார சிக்கல் தீரும் என நம்புகிறோம்.
இந்திய பிரிவுகளுக்காக நாங்கள் ரூ. 1500 கோடி செலவிட்டுள்ளோம். மேலும் ரூ. 1000 கோடியை அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக செலவிடவுள்ளோம்.
இப்போது தேக்க நிலை இருக்கும் சமயத்தில் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்திக் கொண்டால், பின்னர் நிலைமை சரியாகும்போது அதனால் லாபம் உண்டாகும் என்றார் அவர்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications