உயர்நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்த கலெக்டர்!
மதுரை : டி.என்.பிஎஸ்.சி., ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் ஜாதி சான்றிதழை சரி பார்த்து அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டதற்கு மதுரையில் உள்ள உயர் நீதி மன்ற கிளையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் சண்முகம் வருத்தம் தெரிவித்தார்.
தஞ்சை ஜெபமாலைபுரத்தைச் சேர்ந்தவர் கயல்விழி. இவர் மதுரை உயர் நீதி மன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாங்கள் குடும்பத்தோடும் கிறிஸ்துவ மதத்திலிருந்து 1998 ஜூலை 12ல் இருந்து இந்து மத்திற்கு மாறினோம்.
எனக்கு தஞ்சை தாசில்தார் 2000 மே 30 ல் ஆதிதிராவிடர் என ஜாதி சான்றிதழ் வழங்கினார்.
இந்த நிலையில் டி.என்.பிஎஸ்.சி. நடத்திய தலைமை செயலக உதவியாளர் மற்றும் தனி எழுத்தர் பதவிக்கான தேர்வு, விஏஓ தேர்வு, சார்நிலை பணியாளர் தேர்வில் வெற்றி பெற்றேன்.
எனது சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழக்கப்பட்டேன். அப்போது என் பதிவு எண் முடிவு நிறுத்தி வைக்கப்பட்ட பட்டியலில் இடம் பெற்றிருந்தது.
காரணம் ஜாதி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
மேலும் கலெக்டரின் பதில் வந்த பிறகே நியமன உத்தரவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் எனக்கு கடந்த ஒரு வருடம் சம்பாதிக்கும் வாய்ப்பு பறிபோய் உள்ளது.
என்னுடன் தேர்வு எழுதி வேலைக்கு சேந்தவர்களின் பணி மூப்பு அடிப்படையில் எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதே போன்று சந்திரகேகர் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த இரண்டு மனுக்கள் மீதும் விசாரணை நடத்தி அக்டோபர் 14 ம் தேதிக்குள் பதில் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் அந்த உத்தரவு அமுல்படுத்தப்படவில்லை.
இதனால் தஞ்சை மாவட்ட கலெக்டர் சண்முகம் நீதி மன்றத்தில் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்ட கலெக்டர் சண்முகம், நீதிபதிகள் ரவிராஜ பாண்டியன், ஜனார்த்தன ராஜா ஆகியோர் முன்பு நேரில் ஆஜரானார்.
அப்போது ஜாதி சான்றிதழ் சரிபார்பு பணி தாமதம் ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார். எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் ஏற்படாது என்று உறுதி கூறினார்.
இதனையடுத்து நீதிபதிகள் இந்த மனு மீதான விசாரணையை தள்ளி வைத்தனர்.
-
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications