தமிழகம் போதும்-மராட்டியர்களுக்காக போராட ரஜினிக்கு தாக்கரே அழைப்பு

மராட்டியத்தைப் பூர்வீகமாகக் கொண்டு, கர்நாடகத்தில் பிறந்து, வளர்ந்து, இன்று தமிழகத்தின் உச்ச நட்சத்திரமாகவும், இந்தியாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவருமாகவும் திகழும் ரஜினிகாந்த் அரசியல் பக்கம் வரவே தயக்கம் காட்டினாலும், அரசியல்வாதிகள் அவரை விடுவதாக இல்லை.
இந்த நிலையில் இப்போது பால் தாக்கரே, ரஜினியை மராட்டியர்களுக்காகப் போராட மும்பை வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது சாம்னா இதழில் அவர் எழுதியுள்ள தலையங்கத்தில் கூறியிருப்பதாவது...
இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்தும், தமிழர்கள் படும் அவலங்களைக் கண்டித்தும், துயரங்கள், வேதனைகளை மதித்தும் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
இதை நான் வரவேற்கிறேன், ரஜினியைப் பாராட்டுகிறேன். இதை நான் பிராந்தியவாதமாக எடுத்துக் கொள்ளவில்லை. இது முழுமையான தேசியவாதம். இப்படித்தான் இருக்க வேண்டும்.
இலங்கையில் தமிழர்கள் படும் துயரங்களுக்காக ரஜினி காந்த் கவலைப்படுகிறார். அதேபோல இலங்கைத் தமிழர் பிரச்சினையி்ல் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அனைவரும் ஓரணியில் உள்ளனர்.
இவர்கள் கட்சி வேறுபாடுகளை மறந்து விட்டு பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் அறிவித்தனர்.
ஆனால் இதேபோன்ற பிரச்சினையை நாங்கள் மகாராஷ்டிராவில் எழுப்பினால் மட்டும், தேசத்தை உடைக்கப் போவதாக குற்றம் சாட்டுகின்றனர். தமிழர்கள் பிரச்சினைக்காக செய்யும்போது யாரும் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை. அதுவே மராட்டியர்களின் உரிமைகளுக்காக போராடினால் எங்களை தேசத் துரோகிகள் என்கிறார்கள்.
ரஜினிகாந்த் காவிரி நீர் பிரச்சினைக்காக போராடுகிறார். நாங்கள் மராட்டியர்களுக்கு வேலை வாங்கித் தருவதற்காக போராடுகிறோம். தமிழர்களின் உரிமைகளிலும், மராட்டியர்களின் உரிமைகளிலும் வேறுபாடு உள்ளதா.
மராட்டியம் உருவாக 105 பேர் இன்னுயிர் ஈந்தனர். ஆனால் ரஜினிகாந்த்தைப் போல ஒருவர் இன்னும் மராட்டியத்திற்குக் கிடைக்கவில்லை.
தமிழகத்தில் ரஜினிகாந்த்தின் பணிகள் முடிந்து விட்டன. அவர் மராட்டியத்திற்கு வந்து மராட்டியர்களின் உரிமைக்காக போராட வேண்டும் என்று கூறியுள்ளார் தாக்கரே.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications