அதிமுக விழாவில் சிறுவன் சாவு-நஷ்டஈடு உத்தரவு
சென்னை: அதிமுக நடத்திய விழாவின்போது, அமைக்கப்பட்டிருந்த அலங்கார வேலியிலிருந்து பாய்ந்த மின்சாரம் தாக்கி பலியான சிறுவனின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நஷ்ட ஈடு தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூரை சேர்ந்த டீக்கடைக்காரர் கமலநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,
அதிமுக அமைச்சராக இருந்த இந்திரகுமாரி சத்துணவு ஊழியர்கள் மாநாட்டிற்கு வேலூரில் ஏற்பாடு செய்தார். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை சிறப்பு விருந்தினராக விழாவுக்கு அழைத்தனர்.
இதனால் அப்பகுதியில் விழாக்கோலம் போல அலங்கரித்தனர். தெருவில் உள்ள மின்சார வயரிலிருந்து நேரடியாக மின்சாரத்தை எடுத்து அலங்கார விளக்குகளுக்கு பயன்படுத்தினார்கள்.
6.12.95 அன்று ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வந்து விழாவில் கலந்து கொண்டார். விழா முடிந்ததும் மாலையில் ஹெலிகாப்டரில் ஏறி சென்றார்.
இந்த சத்தத்தை கேட்டு எனது 9 வயதான மகன் தினகரன் வெளியில் வந்தான். ஒரு இடத்தில் அலங்கார வேலி சாய்ந்து கிடந்தது. அதில் உள்ள இரும்பு கயிறில் மின்சாரம் பாய்ந்ததால் எனது மகன் ஷாக்' அடித்து மரணம் அடைந்தான். காயம் அடைந்த நான் 11 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன்.
முதல்வர் நிவாரண நிதியிலிருந்து மாவட்ட கலெக்டர் ரூ.10,000 மட்டும் வழங்கினார். ஆனால், ரூ.30,000 வரை கடன் வாங்கி செலவு செய்தேன். மின்சார வாரியம் மற்றும் அதிகாரிகளின் கவனக்குறைவால் தான் எனக்கு இந்த நிலை ஏற்பட்டது. ஆகவே, எனது மகன் மரணத்திற்கும், நான் சிகிச்சை பெற்றதற்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
வழக்கை நீதிபதி கே.கே.சசிதரன் விசாரித்தார். மாவட்ட கலெக்டர் இதற்கு பதில் மனுவை தாக்கல் செய்தார். அரசியல் கட்சி சார்பில் மாநாடு நடத்தப்பட்டது என்றும், இதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது என்றும் கூறினார்.
ஆனால், அந்த விளக்கத்தை நீதிபதி ஏற்கவில்லை. தெருவில் உள்ள மின்சார லைனிலிருந்து நேரடியாக மின்சாரத்தை அலங்கார விளக்குக்காக பயன்படுத்தியுள்ளனர். அதிகாரிகளின் கவனக்குறைவால் தான் இந்த மின்சார விபத்து ஏற்பட்டுள்ளது.
எனவே மனுதாரருக்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தை ஏழரை சதவீத வட்டியுடன் 12 வாரத்திற்குள் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications