ஆட்குறைப்பில் இறங்கியது ஏபிஎன் ஆம்ரோ வங்கி

புதிய வேலை வாய்ப்புகள் குறித்து செய்திகளை மட்டுமே தர விரும்பினாலும், உலக பொருளாதரத்தின் இன்றைய நிலை தொடர்ந்து வேலை இழப்புகள் குறித்த அறிவிப்புகளைத்தான் வெளியிட வைத்துள்ளது பல பெரிய நிறுவனங்களையும்.
இந்த வரிசையில் அடுத்து வருவது ஆர்பிஎஸ் எனப்படும் ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து. எடின்பர்க்கை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த வங்கிதான் ஏபிஎன் ஆம்ரோவின் வங்கிப் பணிகளை உலகமெங்கும் நிர்வகித்து வருகிறது.
வேலையிழக்கப்போகும் ஊழியர்கள் எத்தனைபேர் என்பதை இப்போதே சொல்லவிட முடியாது. விரைவில் அதுகுறித்து முழுமையான அறிவிப்பு வெளியிடப்படும் என்று இந்நிறுவன அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
ஏபிஎன் ஆம்ரோவை இணைத்துக் கொண்ட பிறகுதான் ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்துக்கு கணிசமான நஷ்டம் ஏற்படத் துவங்கியதாம். இந்த ந்டத்தின் அளவு 20 பில்லியன் பவுண்டுகள், அதாவது ரூபாய் மதிப்பில் 1.48 டிரில்லியன். அப்போதிலிருந்தே ஆட்குறைப்பில் கவனம் செலுத்தத் துவங்கிவிட்டதாம் ஆர்பிஎஸ்.
இந்தியாவில் மட்டும் இந்த வங்கிக்குள்ள சொத்து மதிப்பு 36,617 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இந்த வங்கியின் லாபம் 27 சதவிகிதம் குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications