சேலத்தில் பள்ளி மாணவர்கள் கடும் மோதல்-ஒருவர் பலி
சேலம்: சேலம் மாவட்டம் மல்லூரில் பள்ளிக்கூட மாணவர்களில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த மாணவன், சென்னை மருத்துவமனையில் மரணமடைந்ததால் மல்லூரில் பரபரப்பு நிலவுகிறது.
சேலம் அருகே உள்ளது மல்லூர். இங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் படித்து வரும் இரு பிரிவு மாணவர்களுக்கிடையே 15 நாட்களுக்கு முன்பு கடும் மோதல் மூண்டது.
இதில் 11ம் வகுப்பு படித்து வந்த ராமன் என்ற மாணவன் படுகாயமடைந்தான். உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ராமன் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமன், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
இதனால் மல்லூரில் பரபரப்பு நிலவுகிறது. அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை மல்லூர் அரசுப் பள்ளிக்கூட மாணவர்கள், ராமன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியும், தாக்கிய மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் பேரணி நடத்தினர்.












Click it and Unblock the Notifications