துபாய்: தப்பியபோது மாடியிலிருந்து விழுந்து இந்தியர் பலி
Subscribe to Oneindia Tamil
துபாய்: தனது காதலியான, வீட்டு வேலைக்காரப் பெண்ணைப் பார்க்க ரகசியமாக அவர் வேலை பார்த்த வீட்டுக்குள் நுழைந்த இந்திய வாலிபர், வீட்டு உரிமையாளர் திடீரென வந்ததால் அவரிடம் சிக்காமல் தப்ப ஓடியபோது 3வது மாடியிலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
சுர்ரா என்ற இடத்தில் இந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. இறந்த வாலிபரின் வயது 28.
இவர் வீட்டு வேலை பார்த்து வந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்தார். சம்பவ நாளன்று அவரைப் பார்க்க, அவர் வேலை பார்த்து வந்த வீட்டுக்கு நைசாக போயுள்ளார்.
யாருக்கும் தெரியாமல் உள்ளே நுழைந்து விட்ட அவர் காதலியைச் சந்தித்துள்ளார். அப்போது திடீரென வீட்டு உரிமையாளர் வந்து விட்டார்.
இதைப் பார்த்து பயந்து போன அந்த வாலிபர், அவரிடம் சிக்காமல் தப்பிக்க முயன்றார். அப்போது 3வது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.












Click it and Unblock the Notifications