நெருக்கும் ராணுவம்-இறுக்கத்தில் புலிகள்!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: மாவீரர் தின உரைக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், புலிகளின் முக்கியப் பகுதியான ஒலமடுவை பிடித்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சியை ராணுவம் நெருக்கத் தொடங்கியிருப்பதால் புலிகள் தரப்பில் இறுக்கமான நிலை காணப்படுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முக்கியப் பகுதிதான ஒலமடு. விடுதலைப் புலிகள் அமைப்பின் மிக முக்கியப் பகுதியாகும் இது. ஒலமடுவைப் பிடித்தால், மாங்குளம்-முல்லைத்தீவு சாலையை வெகு எளிதாக ராணுவம் பயன்படுத்த முடியும்.

அப்படி நடந்தால் முல்லைத்தீவு ராணுவத்தின் தீவிர நேரடிக் கண்காணிப்பின் கீழ் வரும் வாய்ப்பு உண்டு. முல்லைத்தீவில்தான் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் ரகசிய பதுங்குமிடம் இருப்பதால் ஒலமடுவைப் பிடித்திருப்பதாக ராணுவம் கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

இதுகுறித்து பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 3வது அதிரடிப்படை வீரர்கள், ஒலமடுவை எளிதில் அடைந்து விட்டனர். அங்கு முக்கிய பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.

எந்த சவாலையும் சந்திக்கும் வகையில், இலங்கை வீரர்கள் உள்ளனர். தொடர்ந்து அவர்கள் முன்னேறி வருகின்றனர்.

தற்போது மழை விட்டு விட்டதால், வீர்ரகள் வேகமாக முன்னேறி வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான உணவு, மருந்து, குடிநீர் ஆகியவை போதுமான அளவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

ராணுவத்தின் 57வது பிரிவின் முதலாவது அதிரடிப்படை வீரர்கள், கிளிநொச்சியின் புறநகர்ப் பகுதிகளைக் கைப்பற்றி வருகிறார்கள்.

முக்கிய புலிகள் தலைவர் பலி?:

இதற்கிடையே, சமீபத்திய மோதல் ஒன்றில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான லெப்டினென்ட் கர்னல் ஸ்டான்லி கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

புலிகளின் ரேடியோ பேச்சை இடைமறித்துக் கேட்டபோது இந்தத் தகவல் தெரிய வந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மற்ற பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள தரைப்படை வீரர்களை, கிலாலி மற்று முகமலை பகுதிகளுக்கு விடுதலைப் புலிகள் திருப்பி விட்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+