தீவிரவாதத்தை ஒடுக்க மீண்டும் பொடா- ஜெ
சென்னை: மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் மிகவும் கோழைத்தனமானது. இந்தியாவின் அமைதியை குலைக்கும் செயல் இது. இதற்கு மேலும் தாமதம் செய்யாமல் உடனடியாக பொடா சட்டத்தை மீண்டும் மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
மும்பை தீவிரவாதத் தாக்குதல் குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: மும்பையில் நடந்துள்ள தீவிரவாதிகளின் கொடிய, கோழைத்தனமான தாக்குதலை அனைவரும் மிகக் கடுமையாக கண்டிக்க வேண்டும்.
இந்த நெருக்கடியான நேரத்தில், அனைவரும் உறுதியுடனும், ஒற்றுமையுடனும் இருந்து, இப்படிப்பட்ட செயலுக்கு எதிராக போராட வேண்டும்.
தீவிரவாதத்தை ஒடுக்க உடனடியாக பொடாவைப் போன்ற மிகக் கடுமையான சட்டம் தேவை. தீவிரவாதத்தையும், தீவிரவாத அமைப்புகளையும் கட்டுப்படுத்த தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை.
அரபிக் கடல் வழியாக படகுகள் மூலம் தீவரவாதிகள் வந்ததாக கூறப்படுகிறது. தாஜ் மஹால் ஹோட்டலுக்கு எதிர்புறம் உள்ள கேட்வே ஆப் இந்தியாவுக்கு வந்திறங்கியுள்ளனர்.
அங்கிருந்து தெற்கு மும்பையின் பல பகுதிகளை அவர்கள் தங்களது சரமாரி துப்பாக்கிச் சூட்டால் நடுங்க வைத்துள்ளனர்.
இது உளவுத்துறையின் மிகப் பெரிய தோல்வியாக கருதப்பட வேண்டும். மிகப் பெரிய பாதுகாப்பு குளறுபடியாக கருதப்பட வேண்டும்.
நாட்டின் பல மாநிலங்களில் அடுத்தடுத்து தொடர் குண்டுவெடிப்புகள் நடந்த பிறகும் கூட, மத்திய அரசு தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.
தற்போது இந்தியாவின் எந்த மாநிலமும் பாதுகாப்புக்குரியதாக இல்லை என்பது தெளிவாகி விட்டது. தீவிரவாதிகளும், தீவிரவாத அமைப்புகளும் மிக சுதந்திரமாக நடமாடுகின்றனர் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பயங்கரவாத தொற்றுநோயை உடனடியாக வேரறுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இல்லாவிட்டால் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் தீவிரவாத நோயால் பாதிக்கப்பட்டு விடும்.
இந்த நிலை நீடித்தால் நம் நாட்டுக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து போய் விடும். இந்தியா தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக மாறி விடும். இதனால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.
தீவிரவாத தடுப்புச் சட்டங்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மத்திய அரசுக்கு குறிப்பு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஒவ்வொரு மாநிலமும் தீவிரவாத தடுப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொள்வதை மத்திய அரசு தடுக்கத் தேவையில்லை என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
மேலும், உளவுத்துறை, காவல்துறை ஆகியவையும் கடுமையான சட்டம் தேவை என்பதை வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் இந்த யோசனைகளையெல்லாம் மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. தற்போதுள்ள சட்டங்களே போதுமானது என்று கூறிக் கொண்டிருக்கிறது.
இப்படிச் சொல்வதன் மூலம் அப்பாவி உயிர்களோடு விளையாடுவது மட்டுமல்லாமல், தீவிரவாதிகளுக்கும் மறைமுகமாக மத்திய அரசு உதவி வருகிறது.
மொத்தத்தில் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அனைத்து வகையிலும் தோல்வி அடைந்து விட்டது என்று அவர் கூறியுள்ளார்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications