ஜெ. பாதுகாப்பு: புது உத்தரவு தேவையில்லை - உயர்நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளே போதுமானது, புதிய உத்தரவு எதுவும் தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தனக்கு முழுமையான அளவில் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்து எஸ்.பி. அந்தஸ்திலான ஒரு அதிகாரி, ஜெயலலிதாவை நேரில் சந்தித்து என்ன மாதிரியான பாதுகாப்பு தேவை, என்ன குறைபாடுகள் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டிருந்தார்.

உத்தரவிட்டார். அதன்படி, அட்வகேட் ஜெனரல் மாசிலாமணி, அந்த அறிக்கையை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் உள்ள தமிழர் அமைப்பில் இருந்து மிரட்டல் கடிதம் வந்தது. மேலும் தேவர் ஜெயந்திக்கு அவர் செல்லும் போது, பசும்பொன் கிராமத்தில் கல் வீச்சு சம்பவம் நடந்தது.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் தற்போது நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்துள்ளார். அதில், ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக ஐகோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அனைத்து அம்சங்களும் கவனிக்கப்பட்டுள்ளது, ஆவணங்களைப் பார்க்கும் போது தெளிவாகிறது.

எனவே இந்த விவகாரத்தில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவே போதுமானது என்றும் புதிய உத்தரவு எதையும் பிறப்பிக்கத் தேவையில்லை என்றும் கோர்ட் கருதுகிறது என்று உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+