தனி ஈழம்-இங்கிலாந்து உதவ வைகோ கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இலங்கையில் தமிழ் ஈழம் அமைய இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உதவ வேண்டும் என லண்டனில் நடந்தக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்தார்.

மாவீரர் தினத்தையொட்டி லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்டமான தமிழர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். லண்டன் எக்ஸெல் சென்டரில் நடந்த இக் கூட்டத்தில் 40,000 தமிழர்கள் பங்கேற்றனர். மேலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பல்வேறு இங்கிலாந்து எம்பிக்களும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் அதில் வைகோ பேசுகையில்,

1833ம் ஆண்டு, பிரிட்டன் பேரரசுதான், இலங்கையில் தனி அரசு நடத்தி வந்த தமிழர்களின் பகுதிகளையும், சிங்களர்களின் பகுதிகளையும் ஒன்றாக சேர்த்து, இலங்கை என்ற ஒரு புதிய நிர்வாக அமைப்பை உருவாக்கி விட்டது.
ஆனால், இலங்கையை விட்டு வெளியேறும்போது, பெரும்பான்மை சிங்களர்களிடமே ஆட்சியை ஒப்படைத்து விட்டுச் சென்றுவிட்டது. அதனால்தான் இன்றைக்குத் தமிழர்களை சிங்களர்கள் இனப் படுகொலை செய்து வருகிறார்கள்.

பண்டாரநாயக-செல்வநாயகம் உடன்பாடு தொடங்கி, தமிழர்களுக்கும் சிங்கள அரசுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட எந்த ஒப்பந்தத்தையும் சிங்களத் தலைவர்கள் நிறைவேற்றவில்லை. குப்பை கூடையில் தூக்கிப் போட்டுவிட்டனர்.

தமிழர்களின் அறவழிப் போராட்டங்களை, ராணுவம், போலீஸ் தாக்குதலால் நசுக்க முனைந்தனர். திட்டமிட்ட இனப் படுகொலையை அரங்கேற்றினர்.

தங்கள் உரிமைக்காகப் போராடிய 22,000 போராளிகளும், ஒரு லட்சம் தமிழ் மக்களும் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, தனித் தமிழ் ஈழம் மட்டுமே இந்த பிரச்சினைக்கு நிலையான தீர்வாக அமையும்.

இலங்கை என்பது சிங்களர்களின் நாடுதான் என்று சிங்கள தலைவர்கள் வெளிப்படையாக சொல்லும்போது, இனி அங்கே எப்படி தமிழர்களும், சிங்களவர்களும் ஒற்றுமையாக இருக்க முடியும்?.

ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்து வரும் சிங்கள அரசை கண்டித்து, ஏழு கோடித் தமிழக மக்கள் கொதித்து எழுந்து, தங்கள் எதிர்ப்புணர்வை வெளிக்காட்டி வருகின்றனர்.

யூதர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டபோது, அவர்களுக்கு ஆதரவு அளித்த பிரிட்டன் பேரரசு, இஸ்ரேல் என்ற தனி நாடு அமைவதற்கு உதவியது.

பாலஸ்தீனியர்களின் உரிமை போராட்டம் நியாயமானதே. அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றாலும், யூதர்களுக்கு என்று ஒரு நாட்டை அமைத்துக் கொடுத்தது நீங்கள்தானே?.

அதுபோலவே, தமிழ் ஈழம் அமைவதற்கும் இங்கிலாந்து உதவ வேண்டும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் உதவ வேண்டும் என்றார் வைகோ.

சுமார் 40 நிமிடங்கள் பேசிய வைகோவின் உரை மிக உணர்ச்சிகரமாக அமைந்திருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+