மும்பை-ஆட்டோமொபைல் துறைக்கு மேலும் அடி!
டெல்லி: ஏற்கனவே விற்பனையில் படுத்துக் கிடக்கும் ஆட்டோமொபைல் துறைக்கு, மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவம் இன்னொரு பலத்த அடியைக் கொடுத்துள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் துறை, பெருகி வரும் வட்டி விகிதங்கள் மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாக ரிவர்ஸ் கியரில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் வெந்த புண்ணில் வெடிகுண்டைப் போட்டது போல மும்பை தீவிரவாதத் தாக்குதல் வந்து சேர்ந்துள்ளது.
இந்தியாவின் மொத்த கார் விற்பனையில், மும்பையின் பங்கு மட்டும் 7 சதவீதமாகும். இங்கு மாதத்திற்கு 7000 கார்கள் விற்பனையாகின்றன.
அதிலும் மாதக் கடைசியில்தான் பெரும்பாலான விற்பனை இருக்கும். ஆனால் இந்த மாதக் கடைசியில் தீவிரவாதிகள் புகுந்து பெரும் நாசம் ஏற்படுத்தி விட்டதால் கார் விற்பனை மகா மந்தமாகி விட்டதாம். கிட்டத்தட்ட கார் விற்பனையே இல்லை எனும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது.
இதுகுறித்து ஹூன்டாய் மோட்டார் இந்தியா நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆட்டோமொபைல் துறைக்கு இது மிகப் பெரிய அடியாகும். எங்களது முக்கிய மார்க்கெட்டாக மும்பை உள்ளது.
தீவிரவாதத் தாக்குதலால் ஆட்டோமொபைல் பிரிவுக்கு மிகப் பெரிய நஷ்டம் ஏற்படும். வர்த்தகமும் தேக்க நிலையை சந்தித்துள்ளது என்றார்.
ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா துணைத் தலைவர் பாலேந்திரன் கூறுகையில், மும்பைக்கு வர வேண்டாம் என எங்களது நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளோம்.
எங்களது தயாரிப்புத் தொழிற்சாலை புனேவில் உள்ளது. எனவே மும்பை வழியாக புனே செல்வதை தவிர்க்குமாறு ஊழியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம். நேரடியாக புனே செல்லுமாறும் அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.
அக்டோபர் மாதம் பயணிகள் கார் விற்பனை 6.59 சதவீதமாக குறைந்திருந்தது. மொத்தமே 98 ஆயிரத்து 900 கார்கள்தான் விற்பனையாகின. அதுவே கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 877 கார்கள் விற்பனையாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications