தீவிரவாதி உயிரோடு பிடிபட்டது எப்படி?

அவனைப் பிடிக்க உயிரைப் பணயம் வைத்துள்ளனர் இந்த போலீசார்.
ஓபராய் ஹோட்டலில் தாக்குதல் நடந்தபோது டெல்லியிலிருந்து என்எஸ்ஜி கமாண்டோக்கள் வர காலை ஆகிவிடும் என்பதை உணர்ந்த ராணுவம் முதலில் கடற் படையின் கமாண்டோக்களான 'மார்கோஸ்' (MARCOS) படையினரை களமிறக்கியது.
அவர்கள் சிறிய படையாக இருந்தாலும் ஓபராய் ஹோட்டலுக்குள் நுழைந்து தீவிரவாதிகளை விரட்டவே அஜ்மல் அமீர் கஸாப் மற்றும் அபு இஸ்மாயில் ஆகியோர் வெளியே ஓடி வந்துள்ளனர். அப்போது அங்கு நின்றிருந்த போலீசாரின் குவாலிஸ் ஜீப்பில் ஏறி தப்பினர்.
இந்த ஜீப்பை 50 அடி தூரத்தில் நி்ன்றிருந்த மும்பை போலீசார் சுடவே அதன் இரு டயர்கள் பஞ்சராகிவிட்டன. ஆனாலும் அதை ஓட்டிக் கொண்டு மிட்டல் சேம்பர்ஸ் அருகே உள்ள சாலை வரை வந்துள்ளனர்.
அப்போது எதிரே வந்த ஸ்கோடா காரை வழிமறித்து நிறுத்துமாறு கூறியுள்ளனர். போலீசாரின் வாகனத்தில் சைரன் ஒலிக்க வந்ததால் அவர்களை போலீசார் என நினைத்து அவர்களும் நிறுத்தவே, கீழே இறங்கி வந்து துப்பாக்கியைக் காட்டி காரை விட்டு இறங்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.
இதையடுத்து அதிலிருந்த 3 பேரும் இறங்கி ஓட ஆரம்பித்துள்ளனர். அதில் காரை ஓட்டியவர் சாவியையும் எடுத்துக் கொண்டு ஓடியுள்ளார். இதைப் பார்த்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு சாவியை கேட்கவே, நின்று சாவியை வீசியுள்ளார். அதற்குள் அவனை நெருங்கிய தீவிரவாதி சாவியை எடுத்து கையில் கொடுக்கச் சொல்லிவிட்டு தலையில் துப்பாக்கியை வைத்துள்ளான்.
ஆனால், என்ன நினைத்தானோ அவரை விட்டுவிட்டு காருக்குள் பாய்ந்து அமர்ந்து சென்றுவிட்டான். இதையடுத்து காரை திருப்பிக் கொண்டு ஓபராய் ஹோட்டலுக்கே சென்ற அவர்கள் 10 நிமிடம் கழித்து அதே சாலையில் திரும்ப வந்துள்ளனர்.
இந்தத் தகவலை போலீசாருக்கு ஸ்கோடாவில் வந்தவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே தீவிரவாதிகள் தாக்குதல் குறித்து அறிந்த எல்லா பகுதி போலீசாரும் ஆங்காங்கே சாலைத் தடுப்புகளை ஏற்படுத்தி வாகன சோதனைகளை நடத்த ஆரம்பித்துவிட்டனர்.
கிர்காம் செளபதி என்ற இடத்தில் டிபி மார்க் காவல் நிலைய போலீசார் சாலையில் தடுப்புகளை அமைத்திருந்தனர். சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் காதம் தலைமையில் 13 போலீசார் அந்த இடத்தில் இருந்தனர். இதில் காதம் மற்றும் இன்னொரு சப் இன்ஸ்பெக்டரிடம் ரிவால்வர்களும், மற்ற இரு போலீசாரிடம் .303 துப்பாக்கிகளும் இருந்தன.
இந் நிலையில் ஸ்கோடா கார் இந்த சாலைத் தடுப்பை நெருங்கியதும் சிறிது தொலைவிலேயே நின்றுவிட்டது. இதையடுத்து சந்தேகமடைந்த போலீசார் அந்தக் காரின் விளக்குகளை அணைக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் விளக்குகள் அணைக்கப்படவில்லை. மாறாக வைப்பர்களை இயக்கியுள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த காதமும் இன்னொரு காவலரும் காரை மிக ஜாக்கிரதையாகவே நெருங்கியுள்ளனர். காதம் தனது ரிவால்வரை தயார் நிலைக்குக் கொண்டு வந்தார்.
காரை ஓட்டுபவனை குறி வைத்தவாரே அவர் நெருங்க உள்ளேயிருந்து சுட ஆரம்பித்துள்ளனர் இரு தீவிரவாதிகளும். இதை எதிர்பார்த்தே இருந்த காதம் காரை ஒட்டியிருந்த சந்துக்குள் பாய்ந்துவிட்டார். அங்கிருந்தபடியே அவர் சுட்டதில் காரை ஓட்டிய அபு இஸ்மாயிலின் தலையில் குண்டு பாய்ந்தது.
இதையடுத்து மற்ற போலீசார் டிரைவர் சீட்டுக்கு அருகே இருந்த அமீர் கஸாபை நோக்கி சுடவே அவனுக்கு கையில் குண்டு பாய்ந்தது. அவனால் துப்பாக்கியை இயக்க முடியாமல் போனது. இதையடுத்து காருக்குள் பாய்ந்து இருவரையும் வெளியே இழுத்துப் போட்டனர் போலீசார்.
ருக்கு துப்பாக்கிஇந்தக் கார் கிர்காம் செளபதி என்ற பகுதி வரைக்கும் வந்துள்ளனர்.
அப்போது கூட இவர்கள் தான் மும்பையைத் தாக்கிக் கொண்டிருக்கும் தீவிரவாதிகளில் இருவர் என்பது அந்த போலீசாருக்குத் தெரியாது. பின்னர் கஸாபை டிபி மார்க் காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லும்போது தான் வயர்லெசில் இவர்கள் குவாலிசில் தப்பி, அங்கிருந்து ஸ்கோடாவுக்கு மாறி தப்பியோடிக் கொண்டிருக்கும் செய்தி பாஸ்கர் காதமின் வயர்லெசுக்கு வந்தது.
அப்போது தான் பிடிபட்டது பயங்கர தீவிரவாதி என்பதை உணர்ந்த பாஸ்கர் காதம் அவனுக்கு மிக பலத்த பாதுகாப்பைப் போட்டார். அவனை காவல் நிலைய செல்லில் அடைத்துவிட்டு காவல் நிலையத்தைச் சுற்றிலும் ஆயுதம் தாங்கிய போலீசை நிறுத்திவிட்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தந்தார் காதம்.
இத்தனைக்கும் பயிற்சியின்போது சுட்டதைத் தவிர துப்பாக்கியை அவர் இப்படி லைவ் ஆக பயன்படுத்தியதே இல்லையாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications