கடும் சட்டம் இல்லாவிட்டால் பெடரல் ஏஜென்சியால் பலனில்லை: பாஜக
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முன்வைத்துள்ள புதிய புலனாய்வு ஏஜென்சியை பாஜக எதிர்க்கவில்லை. ஆனால் கடுமையான தீவிரவாத தடுப்புச் சட்டம் இல்லாமல் இந்த ஏஜென்சியை அமைத்தால் அதனால் எந்தப் பயனும் இருக்காது என்று பாஜக பொதுச் செயலாளர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இதுபோன்ற ஏஜென்சி தேவை என்பதே பாஜகவின் எண்ணமும். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரது கொலைச் சம்பவங்களின் போது அமைக்கப்பட்ட அதிரடிப் புலனாய்வுப் படைகளைப் போல இதையும் அமைக்கலாம்.
ஆனால் கடுமையான தீவிரவாத தடுப்புச் சட்ட் இல்லாமல் இந்த ஏஜென்சியை அமைத்தால் அதனால் எந்தப் பயனும் இருக்காது.
வலுவான அதிகாரம் இல்லாமல் இந்த ஏஜென்சி அமைந்தால் அதனால் யாருக்கும் பலன் இல்லை.
தற்போது உள்ள ஐபி, சிபிஐ மற்றும் ரா ஆகிய புலனாய்வு அமைப்புகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதுதான் இந்த புதிய புலனாய்வு ஏஜென்சியின் நோக்கமாக இருக்கும் என கருதுகிறேன்.
தீவிரவாதம் குறித்து காங்கிரஸ் கட்சி மென்மையான நிலையை மேற்கொண்டுள்ளது. வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு இவ்வாறு அது செயல்படுகிறது. இந்த நிலையில், திடீரென அவர்கள் கடுமையான நிலையை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
ஆனால் மும்பை முற்றுகையைத் தொடர்ந்து அவர்கள் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நிலையை எடுக்க வேண்டியுள்ளது.
தற்போது மகாராஷ்டிராவில் உள்ள மகாராஷ்டிர திட்டமிட்ட குற்றத் தடுப்புச் சட்டம் சற்று கடுமையானது. அதில் உள்ள அனைத்து அதிகாரங்களையும் இந்த புலனாய்வு ஏஜென்சிக்கு வழங்க வேண்டும் என்றார் ஜேட்லி.
-
அண்ணாமலைன்னா சும்மாவா.. பாஜக ஆஃபர் தந்தும் ஏற்கலயாமே? இன்று 12 மணிக்கு என்ன நடக்க போகுதோ -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம











Click it and Unblock the Notifications