நெருக்கடியான சூழலில் நாடு: காங்-பவார் ஜாதி சண்டை
மும்பை: மும்பை தாக்குதலையடுத்து மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கும் துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீலும் பதவி விலக வேண்டிய நிலைக்கு தள்ளப்படாலும் அவர்களுக்குப் பதிலாக யாரை முதல்வர், துணை முதல்வராக்குவது என்பது குறித்து காங்கிரசும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும் ஜாதி்ச் சண்டை நடத்திக் கொண்டுள்ளன.
நாடு நெருக்கடியான நிலையை சந்தித்துக் கொண்டுள்ள சூழலில் இந்த ஜாதி சண்டை நடந்து கொண்டுள்ளது.
தனது மகனும் நடிகருமான ரிதேஷையும் இயக்குனர் ராம்கோபால் வர்மானவையும் அழைத்துக் கொண்டு தாஜ் ஹோட்டலில் தீவிரவாத தாக்குதல் சேதங்களைப் பார்வையிட்டதால் விலாஸ்ராவ் மீது நாடே கோபமானது. இதையடுத்து அவரை காங்கிரஸ் தலைமை பதவி விலகச் சொன்னது. ஆனால், கடும் நெருக்கடிக்குப் பின்னரே தனது ராஜினாமா கடிதத்தை அவர் தந்தார்.
அதே போல மும்பை போன்ற நகர்களில் இது போன்ற தாக்குதல் எல்லாம் சகதம் என்றும் இதெல்லாம் சின்ன தாக்குதல் தான் என்றும் உளறிய துணை முதல்வரான தேசியவாத கட்சியைச் சேர்ந்த ஆர்.ஆர்.பாட்டீலும் கட்டாயத்தின்பேரில் ராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
ஆனால், இவர்கள் பதவி விலகுவதாக அறித்து 3 நாட்களான பின்னரும் கூட அடுத்த முதல்வர் யார் என்பதில் காங்கிரஸ்-பவார் இடையே மோதல் நடந்து கொண்டுள்ளது. இதன் பின்னணியில் ஜாதி உள்ளது தான் மிகக் கொடுமையானது.
ஓட்டுகளை மனதில் வைத்து அடுத்த முதல்வராக மராட்டி ஒருவர் தான் வர வேண்டும் என்று காங்கிரஸ் கருதுகிறது. இதனால் மத்திய அமைச்சரான பிரிதிவிராஜ் செளகானை முதல்வராக்க நினைத்தது.
ஆனால், இவரை முன் நிறுத்தினால் மராட்டியான தனது முக்கியத்துவம் மக்களிடையே குறைந்துவிடும், காங்கிரஸ் லாபம் அடைந்துவிடும் என்பதால் அவரை ஏற்க சரத் பவார் மறுத்துவிட்டார்.
மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவையே முதல்வராக்க வேண்டும் என்று பவார் கூறுவதாகத் தெரிகிறது. தலித் சமூகத்தைச் சேர்ந்தவரான ஷிண்டே ஏற்கனவே முதல்வராக இருந்தவர் தான் என்றாலும் இப்போது அவரை முதல்வராக்க காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை.
மராட்டா ஒருவரையே முதல்வராக்க கருதுகிறது. இதனால் மகாராஷ்டிர தொழில்துறை அமைச்சர் அசோக் சவானை முதல்வராக்க திட்டமிட்டது. ஆனால், இவரை முதல்வராக்கினாலும் தனது மராட்டா முக்கியத்துவம் குறைந்துவிடும் என பவார் கருதுகிறார்.
இதையடுத்து பாலாசாகிப் விகே பாட்டீலை நியமிக்கலாமா என்று காங்கிரஸ் யோசித்து வருகிறது.
இந் நிலையில், புதிய துணை முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று மும்பையில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதைத் தவிர்க்க ஆர்.ஆர்.பாட்டீல் அவசர, அவசரமாக சொந்த ஊர் சென்றார். ஆனால், கட்சியின் தலைவர் சரத் பவாரும், மற்ற மூத்த தலைவர்களும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, கூட்டத்தில் பங்கேற்கும்படி கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, கூட்டத்தில் பங்கேற்க சம்மதித்தார். அவரை அழைத்து வர மும்பையில் இருந்து ஹெலிகாப்டர் சென்றது.
அவருக்கு கட்சியின் மாநில தலைவர் பதவி தரப்படலாம் எனத் தெரிகிறது.
புதிய முதல்வரை தேர்வு செய்யும் பணியில் பாதுகாப்புத்துறை அமைச்சரும் மகாராஷ்டிர காங்கிரஸ் பொறுப்பாளருமான ஏ.கே.ஆண்டனி தான் சோனியா, பவார் ஆகியோருடன் ஆலோசனைகள் நடத்திக் கொண்டுள்ளார்.
கடற்படையின் தோல்விக்கு பொறுப்பேற்று முதலில் இவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஆண்டனி காதில் போட்டுக் கொள்ளவில்லை. ராஜினாமா செய்யத் தயார் என்று சோனியாவிடம் கூறியதோடு நிறுத்திவிட்டு தனது அரசியல் வேலையில் பிஸியாக இருக்கிறார்.
இதற்கிடையே இதையெல்லாம் ஜாலியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு தனது முதல்வர் பதவியில் இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளார் தேஷ்முக். அவர் இந்த ஜாதி சண்டையில் பதவியை தக்க வைத்துக் கொண்டாலும் கூட ஆச்சரியமில்லை..
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications