தமிழக கடலோர பாதுகாப்பு-என்ன உதவி வேண்டும்?-உள்துறை கேட்கிறது
சென்னை: தமிழக கடலோரப் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க என்னென்ன உதவிகள் வேண்டும் என்று கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து மாநில அரசுக்கு கடிதம் வந்துள்ளது.
தமிழக கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க 24 அதிநவீன ரோந்து படகுகள் வாங்க மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. தமிழக கடலோர மாவட்டங்களில் 100 செக்' போஸ்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மும்பையில் கடல் வழியாக தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தியதையடுத்து நாடு முழுவதுமே கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழக கடலோரப் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க என்னென்ன உதவிகள் வேண்டும் என்று கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து மாநில அரசுக்கு கடிதம் வந்துள்ளது.
இதையடுத்து தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் டிஜிபி ஜெகன் சேஷாத்ரி தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
தமிழக கடலோர பகுதிகளில் இப்போதுள்ள 100 செக் போஸ்டுகளை மேலும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல கடல் பகுதிகளில் 12 இடங்களில் மட்டுமே காவல் நிலையங்கள் உள்ளன. இதன் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக இந்த 12 காவல் நிலையங்களுக்கும் 24 நவீன ரோந்து படகுகள் வாங்கும் திட்டத்தை விரைவுபடுத்தவும் இவற்றைக் கையாளும் போலீசாருக்கு நவீன துப்பாக்கிகள் தரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த 24 ரோந்து படகுகளி்ல் சில படகுகள் கொல்கத்தாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டுவிட்டன. மற்ற படகுகளை கட்டும் பணியை விரைவாக்க கோரிக்கை வைக்கப்படவுள்ளது.
சென்னை என்எஸ்ஜி மையம்:
இதற்கிடையே மத்திய அரசு அமைக்கவுள்ள 4 என்எஸ்ஜி படை மையங்களில் ஒன்றை சென்னையில் அமைக்குமாறு மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழக கடலோர பாதுகாப்பு குழுமமும் வலியுறுத்தியுள்ளது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications