கோவை மாநகராட்சி உதவி கமிஷனர் டிஸ்மிஸ்!
Subscribe to Oneindia Tamil
கோவை: வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த கோவை மாநகராட்சி உதவி கமிஷ்னரை பணி நீக்கம் செய்து கமிஷனர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கோவை மாநகராட்சியில் உதவி ஆணையராக பணியாற்றுபவர் பிரபாகரன் (57). இவரை பணி நீக்கம் செய்வதற்கான நோட்டீசை, மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா அனுப்பியுள்ளார்.
வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான விசாரணைக்கு பதில் அனுப்பாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபாகரன் 1974ம் ஆண்டு, லைசென்ஸ் இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார். அதன் பின்பு பல்வேறு பணியிலிருந்த அவர், கடந்த 2003ம் ஆண்டு முதல் உதவி ஆணையராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்படதக்கது.












Click it and Unblock the Notifications