'மும்பை': தீவிரவாதிகளுக்கு உதவிய காஷ்மீர் போலீஸ்காரர் கைது
கொல்கத்தா& அகமதாபாத்: மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் 6 பேரைப் பிடித்து மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதே போல கொல்கத்தாவில் ஜம்மூ காஷ்மீரைச் சேர்ந்த போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகள் கடத்திப் பயன்படுத்தி எம்.வி. குபேர் மீன் பிடி படகு குறித்து இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள்தான் குபேர் படகை மும்பைக்கு வழி நடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் கட்ச் மற்றும் ஜாம்நகர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். கடந்த காலத்தில் இவர்கள் வெடி பொருட்களைக் கடத்தியது தொடர்பாக சிக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு தாவூத் இப்ராகிம் கூட்டத்துடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கொல்கத்தாவில் போலீஸ்காரர் கைது:
இதற்கிடையே தீவிரவாதிகளுக்கு உதவியதாக ஜம்மூ காஷ்மீரைச் சேர்ந்த போலீஸ்காரர் முக்தார் அகமத் மற்றும் தெளபீக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இருவரும் தீவிரவாதிகளுக்கு 20க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வாங்கித் தந்தது தெரியவந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்தவரான முக்தாரின் மனைவி கொல்கத்தாவைச் சேர்ந்தவர் ஆவார்.
சில காலம் கொல்கத்தாவிலும் வசித்துள்ள முக்தாருக்கு வங்க தேச தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் மூலமாக மும்பை தாக்குதலுக்கு வந்தவர்களுக்கு சிம் கார்டுகளை வாங்கி்த் தருவதில் இவரும் தெளபீக்கும் உதவியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications