பாகிஸ்தானை தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர்: மன்மோகன் சிங்
டெல்லி: மும்பைத் தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் நாடு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச சமுதாயம் நெருக்குதல் தர வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ரஷ்ய அதிபர் மெத்வதேவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் மன்மோகன் சிங்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மும்பைத் தீவிரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் நாடு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்பிராந்தியத்தை தீவரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த கொடிய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக நாடுகள் நிர்ப்பந்தம் செய்ய வேண்டும்.
உலக அமைதிக்கு தீவிரவாதம் பெரும் மிரட்டலாக உருவெடுத்திருப்பதை அனைவரும் உணர வேண்டும்.
இந்தியாவின் இந்த செய்தி, சமீபத்தில் டெல்லி வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸிடமும் தெரிவிக்கப்பட்டது.
குற்றம் இழைத்த தீவிரவாதிகளை தண்டிப்பதற்கு உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்.
மும்பை சம்பவம் தொடர்பாக என்னைத் தொடர்பு கொண்ட அனைத்து உலக நாடுகளின் தலைவர்களிடமும் இதுகுறித்து நான் வலியுறுத்திக் கூறியுள்ளேன். இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியா கோபத்துடனும், காயத்துடனும் இருப்பதாக அவர்களிடம் நான் தெரிவித்தேன்.
இந்த கொடிய குற்றத்தை இழைத்தவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். இதுதான் நான் அனைவருக்கும் விடுக்கும் செய்தி என்றார் மன்மோகன் சிங்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications