சிஆர்ஆர் மாற்றமில்லை: ரெபோ ரேட் 6.5% ஆக குறைப்பு!
டெல்லி: நாட்டின் பணப்புழக்கத்தை மேலும் அதிகரிக்கவும், வட்டி விகிதங்களைக் குறைக்கவும் இந்திய ரிசர்வ் வங்கி வங்கி வட்டி விகிதத்தை 100 புள்ளிகள் அடிப்படையில் குறைத்துள்ளது. இதுவரை 7.5 சதவீகிதமாக இருந்த ரெபோ ரேட் 6.5 சதவீகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விகிதம் இன்றே அமலுக்கு வருகிறது. இதன்மூலம் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் பணத்துக்கான வட்டி குறையும்.
இதனால் வீட்டுக் கடன், வாகனக் கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்கலாம் எனத் தெரிகிறது.
அதே நேரத்தில் சிஆர்ஆர் எனப்படும் ரொக்க இருப்பு விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. அது 5.5 சதவீகிதமாகவே நீடிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு மாத காலத்தில் இதுவரை 2.5 சதவீகிதம் வரை ரெபோ ரேட்டைக் குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.
ரெபோ ரேட் குறைக்கப்பட்டால்தான் அதிக ரிஸ்க் எடுத்து வாடிக்கையாளர்களுக்கு கடன் தர முடியும் என வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் நேற்று முறையிட்டன. இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications