வெள்ள நிவாரணப் பணிகளில் வேகம் - கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

மழை வெள்ள நிவாரண பணிகள் குறித்து 12 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.
வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் புயல் சின்னத்தைத் தொடர்ந்து இந்தக் கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில் வெள்ள நிவாரண பணிகளுக்காக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சரவை குழு அளித்துள்ள அறிக்கை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சை, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் ஆகிய கடலோர மாவட்டங்களில் அதிக அளவில் ஏற்பட்டுள்ள சேத மதிப்பீடு குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் விரைந்து நிவாரணம் வழங்க போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை களை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு கருணாநிதி உத்தரவிட்டதாக தெரிகிறது.
வெள்ள நிவாரண பணிகளுக்கு கருணாநிதி முதல் கட்டமாக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்தார். அதனை தொடர்ந்து மேலும் கூடுதலாக ரூ. 500 கோடியை வெள்ள நிவாரண பணிகளுக்கு ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டார்.
தற்போது அதிக அளவில் வெள்ள சேதம் ஏற்பட்டு இருப்பதால் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி தமிழக அரசு நிவாரண பணிகளுக்கு மேலும் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிவாரணத் தொகை ரூ. 2லட்சமாக உயர்வு
கூட்ட முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, மழை, வெள்ளத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதை ஏற்று ரூ. 1லட்சமாக அறிவிக்கப்பட்ட நிவாரணத் ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்றார்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications