வெள்ள பகுதிகளைப் பார்வையிட தமிழகம் வந்தது மத்திய குழு
சென்னை: தமிழக மழை, வெள்ள சேதத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மத்திய நிபுணர் குழு சென்னை வந்தது. 2 குழுக்களாகப் பிரிந்து வெள்ள சேதத்தை அவர்கள் பார்வையிடுகின்றனர்.
சமீபத்தில் வங்கக் கடலில் ஏற்பட்ட நிஷா புயலால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது.
பல லட்சக்கணக்கான நெற் பயிர்கள் நாசமடைந்தன. சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவையும் பெரும் சேதத்தை சந்தித்தன. ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் வெள்ள சேதத்தைப் பார்வையிட மத்திய நிபுணர் குழுவை அனுப்ப வேண்டும் என முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார். அதை ஏற்று மத்திய அரசு நிபுணர் குழுவை நேற்று அனுப்பி வைத்தது.
மத்திய உள்துறை இணைச் செயலாளர் ஸ்கந்தன் தலைமையிலான நிபுணர் குழுவினர் நேற்று இரவு சென்னை வந்தனர். ஸ்கந்தன் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். தமிழகத்தில் கலெக்டராகவும் இருந்துள்ளார். அவரது தலைமையிலான குழுவில் 8 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர் இன்று காலை தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகின்றனர். பின்னர் தலா நான்கு பேராக பிரிந்து, தலா 2 மாவட்டங்களை அவர்கள் பார்வையிடுகின்றனர். 2 நாட்களுக்கு இந்த ஆய்வு நடைபெறுகிறது.
வியாழக்கிழமை தங்களது ஆய்வை முடித்து விட்டு சென்னை திரும்பும் நிபுணர் குழு தமிழக அரசிடமிருந்து பெற்ற அறிக்கை மற்றும் தங்களது அறிக்கையுடன் டெல்லி திரும்புகிறார்கள். உள்துறை அமைச்சகத்திடம் தங்களது அறிக்கையை அளிப்பார்கள்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications