பிச்சையெடுக்க அழைத்து வந்த சிறுவனை மீட்ட போலீஸ்
திருச்சி: திருச்சியில் பிச்சையெடுக்க வைக்க கடத்தி வரப்பட்ட சிறுவனை ரயில்வே போலீசார் மீட்டனர்.
திருச்சி ரயில் நிலையத்தில் 6 வயது மதிக்கதக்க சிறுவன் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தான். இதனைக் கண்டு சந்தேகம் அடைந்த ரயில்வே போலீசார் அந்த சிறுவனை அழைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த சிறுவன் தனது பெயர் அரவிந்தன் என்றும், சொந்த ஊர் கும்பகோணம் என்றும், அங்கிருந்து தாய் மாமன் ஜெயசீலன் என்பவர் தனது உடைந்த கைகளுக்கு சிகிச்சையளிக்க திருச்சி அழைத்து வந்ததாக கூறினான்.
அப்போது சிறுவன் அரவிந்தன் மாமா ஜெயசீலன் கடும் போதையில் இருந்தார். இதனால் அவரது போதை தணியும் வரை காத்திரு்நத போலீசார் பின்பு விசாரித்த போது, சிறுவன் அரவிந்தனை பிச்சையெடுக்க அழைத்து வந்ததாக ஜெயசீலன் கூறினான்.
இதனையடுத்து சிறுவன் அரவிந்தன் சைல்டு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டான். ஜெயசீலனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications