குறைந்த சம்பளத்தில் இந்திய பணியாளர்கள்: யாஹூ திட்டம்
சான்பிரான்ஸிஸ்கோ: மேலும் 1500 ஊழியர்களை நீக்குவதாக அறிவித்துள்ளது முன்னணி இணையதள நிறுவனமான யாஹூ. அதிக சம்பளம் வாங்கும் இப்போதைய பணியாளர்களில் பலரைநீக்கிவிட்டு, குறைந்த சம்பளத்துக்கு இந்தியர்களை அமர்த்தவும் அந்நிறுவனம் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம்தான் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை நீக்குவதாக அறிவித்தது யாஹூ.
15000 ஊழியர்களைக் கொண்டுள்ள யாஹூ இப்போது மேலும் 10 சதவிகித ஊழியர் குறைப்பில் இறங்கியுள்ளதாக சிலிக்கன் வேலியிலிருந்து வெளியாகும் 'ஆல் திங்ஸ் டிஜிட்டல்' எனும் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் தற்போது அதிக சம்பளம் வாங்கி வரும் அதன் பெரும்பாலான ஊழியர்களை நீக்கிவிட்டு, அதை விட குறைந்த சம்பளம் பெறத் தயாராக உள்ள இந்தியர்கள் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications