மத்திய நிதியமைச்சராகும் எஸ்.எம்.கிருஷ்ணா?
டெல்லி: மத்திய நிதியமைச்சர் பொறுப்பை முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் ஒப்படைப்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
நிதியமைச்சராக இருந்து வந்த ப.சிதம்பரம், உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து வந்த சிவராஜ் பாட்டீல் பதவி விலகியதைத் தொடர்ந்து அப்பொறுப்புக்கு மாற்றப்பட்டார். நிதியமைச்சர் பொறுப்பை தற்காலிகமாக தற்போது பிரதமரே வைத்துள்ளார்.
ஏற்கனவே அவரிடம் ஓய்வூதியர் நலன், பென்ஷன், திட்டம், அணுசக்தி மேம்பாடு, விண் வெளி ஆய்வு, நிலக்கரி, வனம் மற்றும் சுற்றுச்சூழல், தகவல்-செய்தி ஒளிபரப்பு என 6 இலாகாக்கள் உள்ளன.
இந்த நிலையில் அமைச்சரவையை மாற்றியமைக்க பிரதமர் யோசித்து வருகிறார். அப்போது நிதியமைச்சர் பொறுப்பை வேறு ஒருவரிடம் விட மன்மோகன் சிங் திட்டமிட்டுள்ளார்.
5 பெயர்கள் பரிசீலனை:
நிதியமைச்சர் பொறுப்புக்கு தற்போது ஐந்து பேரின் பெயர்கள் பிரதமரின் பரிசீலனையில் உள்ளன. முதலில் உள்ள பெயர் சி.ரங்கராஜன். முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநராகவும், முன்னாள் ஆந்திர மாநில ஆளுநராகவும் இருந்தவர். தற்போது ராஜ்யசபா எம்.பியாக இருக்கிறார்.
நிதித்துறையில் மிகுந்த அனுபவம் கொண்டவரான ரங்கராஜனை நிதியமைச்சராக்க பிரதமர் விரும்புகிறார். ஆனால் நிதித்துறையில் நிபுணராக உள்ள ரங்கராஜனால், தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் திறமை இருக்கிறதா என்பதில் சந்தேகம் இருப்பதால் ரங்கராஜன் நிதியமைச்சராவது கடினம்தான் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து எஸ்.எம்.கிருஷ்ணாவின் பெயர் அடுத்த இடத்தில் உள்ளது. இவரும் பழுத்த அரசியல்வாதிதான். மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்தார். கர்நாடக மாநில துணை முதல்வராகவும், முதல்வராகவும் இருந்தவர்.
இவரது மேற்பார்வையில்தான் கர்நாடக சட்டசபைத் தேர்தலை காங்கிரஸ் சந்தித்தது. ஆனால் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தது.
நல்ல அனுபவசாலி என்பதால் கிருஷ்ணாவுக்கு நிதியமைச்சர் பொறுப்பு போகக் கூடும். ஆனால் தற்போது அவர் எம்.பியாக இல்லை.
என்றாலும் பதவி ஏற்று 6 மாதம் வரை எம்.பி. ஆக அவகாசம் உள்ளது. அதற்குள் தேர்தல் வந்து விடும் என்பதால் எஸ்.எம்.கிருஷ்ணாவை நிதியமைச்சராக்க ஆதரவு அதிகம் உள்ளது.
இவரை விட்டால் அடுத்தபடியாக நிதியமைச்சர் பொறுப்புக்கு பரிசீலனையில் உள்ளவர் வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத்.
இவர்கள் தவிர மத்திய இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷ், மேற்கு வங்க மாநில எம்.பி சென்குப்தா ஆகியோரது பெயர்களும் பட்டியலில் உள்ளன.
தற்போதைக்கு ரங்கராஜன் மற்றும் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பெயர்கள் முன்னணியில் உள்ளன. அதிலும் கிருஷ்ணாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications