வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய குழு இன்றும் ஆய்வு
தஞ்சை: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்றும் மத்திய நிபுணர் குழு 2வது நாளாக ஆய்வு நடத்துகிறது.
தமிழ்நாட்டில் அண்மையில் பெய்த கடும் மழையால் பல மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது.
இதனால் நிவாரணப் பணிகளுக்காக மாநில அரசு முதல் கட்டமாக ரூ.100 கோடியும், இரண்டாவது கட்டமாக ரூ.500 கோடியும் ஒதுக்கியது. மத்திய அரசு முதல்கட்ட நிதி உதவியாக ரூ.200 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேத பாதிப்புகளை பார்வையிட மத்திய உள்துறை இணைச் செயலாளர் ஸ்கந்தன் தலைமையில் வந்துள்ள மத்திய நிபுணர் குழுவில், மத்திய திட்டக் குழுவின் மூத்த ஆலோசகர் முரளீதரன், மத்திய ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் மனோஜ் குமார், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழக செயல் இயக்குனர் சுப்பிரமணியம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு வருகின்றனர்.
நேற்று காலை தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகளில் அக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
பிற்பகலில் திருவையாறு, கும்பகோணம், பாபநாசம் ஆகிய பகுதிகளில் வெள்ளம் பாதித்த இடங்களை அவர்கள் பார்வையிட்டார்கள். தஞ்சை மாவட்டத்தில் சுமார் இரண்டேகால் லட்சம் ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்தது.
மாநில அரசு ஏக்கருக்கு ரூ.7,500 நஷ்டஈடு அறிவித்து மிக குறைவான தொகை என்றும், அதற்கு பதிலாக ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
இன்று திருவாரூர், நாகை மாவட்டங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.
பின்னர் நாளை சென்னை திரும்பும் மத்திய குழுவினர் முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications