டெல்லி கன்னாட் பிளேஸில் வெடிகுண்டு பீதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் ஆட்டோ ஒன்றில் கிடந்த மர்மப் பையால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது.

நேற்று மாலை இரண்டு நைஜீரிய நாட்டவர் ஒரு ஆட்டோவைப் பிடித்தனர். இருவரும் பங்ளா சாஹிப் அருகே இறங்கிக் கொண்டனர். பின்னர் ஆட்டோ டிரைவர் ஆட்டோவை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

அப்போது ஒரு பை கிடப்பதைப் பார்த்த டிரைவர் பீதியடைந்தார். உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார், மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்தனர். என்.எஸ்.ஜி. கமாண்டோக்களும் விரைந்தனர்.

மர்மப் பையில் வெடிகுண்டு இருக்கலாம் என்று தகவல் பரவியதால் கன்னாட் பிளேஸ் பகுதியே பீதியில் மூழ்கியது. வெடிகுண்டு நிபுணர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் அந்தப் பையை மீட்டு அதில் சோதனை போட்டனர்.

அப்போது பையில் வெடிகுண்டு இல்லை என்பது தெரிய வந்தது. மாறாக ஒரு திரவ பாட்டில் இருந்தது. பேக்கின் உள்ளே ஒரு பையும் இருந்தது.

அந்த திரவம் என்ன என்று ஆராய்ந்தபோது, கள்ள டாலர் பணம் அச்சடிக்கப் பயன்படும் வேதிப் பொருள் எனத் தெரிய வந்தது. பேக்கின் உள்ளே இருந்த பையை பார்த்தபோது அதில் சில கள்ள டாலர் நோட்டுக்கள் இருந்ததும் தெரிய வந்தது.

மாலையில் ஆரம்பித்த இந்த சோதனை இரவு 11.15 மணிக்குத்தான் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் வெடிகுண்டு பீதி நீங்கியது.

டெல்லியில் ஆட்டோக்களில் வெடிகுண்டுகளை வைத்து நாச வேலையில் ஈடுபட தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக முன்பு செய்தி வெளியாகியிருந்தது நினைவிருக்கலாம். இதனால்தான் நேற்று இந்த மர்மப் பையால் கன்னாட் பிளேஸ் பகுதியில் பெரும் பீதி ஏற்பட்டு விட்டது.

அந்தப் பையை விட்டுச் சென்ற இரு நைஜீரியர்களும் கள்ள நோட்டு பிசினஸில் ஈடுபட்டுள்ளவர்களாக இருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+