தென்காசி-மேலப்பாளயைத்தில் தலைமறைவு தீவிரவாதி பதுங்கல்?
நெல்லை: தமிழகத்தில் பெரும் நாச வேலையில் ஈடுபட சதித் திட்டம் தீட்டியதாக போலீஸாரால் தேடப்பட்டு வரும் தெளபீக் பதுங்கியிருப்பதாக கிடைத்தத் தகவலின் பேரில் நெல்லை மாவட்டம் தென்காசி மற்றும் மேலப்பாளையம் பகுதிகளில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
தஞ்சை அதிராம்பட்டிணம் பகுதியை சேர்ந்தவர் தவுபீக். இவர் சென்னை மன்னடியில் தங்கி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார். இறைவன் ஒருவனே என்ற அமைப்பு மூலம் பலருக்கு மூளை சலவை செய்து அவர்களை தீவிரவாதிகளாக மாற்றி பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு சதி திட்டத்தைத் தீட்டினார்.
கடந்த சுதந்திர தினத்தன்று சென்னை, நெல்லை, திருச்சி, கோவை, மதுரை உள்பட பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு நடத்த தெளபீக் தலைமையிலான தீவிரவாத கும்பல் சதி திட்டம் தீட்டியது. ஆனால் போலீசார் சிறையில் பேசப்படும் செல்போன்களை கண்காணித்து முளையிலேயே அதை கிள்ளி எறிந்தனர்.
நெல்லை பேட்டையில் வெடிகுண்டுகளை தயார் செய்து டைம் பாம்மாக உருவாக்கிய அப்துல் கபூர் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரது கூட்டாளியான நெல்லையை சேர்ந்த ஹீரா மற்றும் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதி அலி அப்துல்லா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ஆனால் இந்த குண்டு வெடிப்பு சதி திட்டத்துக்கு மூளையாக இருந்து செயல்பட்ட சென்னை மன்னடியை சேர்ந்த தெளபீக் மட்டும் போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவானார்.
இதனால் சென்னை சிறப்பு புலனாய்வு போலீசார் தீவிரவாதி தெளபீக்கை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர். தற்போது மும்பை தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து தலைமறைவு தீவிரவாதிகள் பட்டியலில் உள்ள தெளபீக் உள்பட 11 தீவிரவாதிகள் பற்றி சென்னை தனிப்படை போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினார்கள்.
அப்போது தெளபீக் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மற்றும் தென்காசி பகுதியில் வேறு பெயரில் ரகசியமாக பதுங்கி இருப்பது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து அவரைப் பிடிக்க 3 தனிப்படை போலீசார் நெல்லை வந்தனர். இவர்களில் ஒரு பிரிவினர் தென்காசி பகுதியில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மற்றொரு பிரிவினர் மேலப்பாளையம் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். 3வது தனிப்படை போலீசார் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணம் பகுதியில் ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications