241 ரன்களில் சுருண்ட இந்தியா-இங்கிலாந்தும் தடுமாறுகிறது!
சென்னை: சேப்பாக்கம் டெஸ்ட்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 241 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது.
இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் எடுத்து தடுமாறிக் கொண்டுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது.
2-ம் நாளான நேற்று இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 316 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் ஆடத் தொடங்கிய இந்தியா நேற்று ஆட்ட நேர இறுதியில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன் எடுத்திருந்தது.
கேப்டன் டோனி மற்றும் ஹர்பஜன்சிங் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. டோனி மற்றும் ஹர்பஜன் சிங் பொறுப்போடு ஆடினர். இருவரும் சேர்ந்து 7 வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்தனர்.
பின்னர் ஹர்பஜன் சிங் 40 ரன் எடுத்த நிலையில் பனேசர் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அதை அடுத்து ஜாகீர்கான் ஆட வந்தார். ஜாகீர்கான் ஒரு ரன்னில் பிளிண்டாப் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனிடையே கேப்டன் டோனி, அரைசதம் அடித்தார். அவர் அடித்து ஆட முற்பட்ட போது, பனேசர் பந்து வீச்சில் 53ரன்களில் ஆட்டமிழந்தார். மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 241 ரன் எடுத்திருந்தது.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு 3வது பந்தில் ஹமீத் மிஸ்ரா 12 ரன்களில் பிளிண்டாப் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இந்தியா 241 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 75 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து தரப்பில் பனேசர் மற்றும் பிளிண்டாப் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
இந்திய பந்து வீச்சு அபாரம்:
தொடர்ந்து 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி பகல் 1.30 மணி நிலவரப்படி மூன்று விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் எடுத்திருந்தது. அலிஸ்டர் குக், பெல், பீட்டர்ஸன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இப்போது ஸ்ட்ராஸ் 35 ரன்களுடனும் கோலிவுட் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இஷாந்த் சர்மா, யுவராஜ் சிங் மற்றும் அமித் மிஸ்ரா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
-
தங்க இறக்குமதியில்.. ஒரு கிலோவுக்கு ₹10 லட்சம் தள்ளுபடி.. வரி 15% உயர்வு.. என்னங்க நடக்குது? -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications