சென்னையில் எட்டாவது உலகத் தமிழாசிரியர் மாநாடு
சென்னை: சென்னையில் எட்டாம் உலகத் தமிழாசிரியர் மாநாடு இன்று தொடங்கியது. இதில் சிங்கப்பூரிலிருந்து 80 ஆசிரியர்களும் மலேசியாவிலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், இலங்கை, லண்டனிலிருந்தும் ஏராளமான ஆசிரியர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் இன்றும் நாளையும் நடக்கிறது.
சு.ஈசுவரன் வரவேற்புரையாற்ற, சகாதேவன் தொடக்கவுரையாற்றினார். இதையடுத்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
மாநாட்டு மலரைப் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிடுகிறார். சா.அன்பழகன் மாநாட்டு அறிக்கை தாக்கல் செய்கிறார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மாநாட்டு அமர்வுகளில் முனைவர் மா.நன்னன், எ.சகாதேவன் (மலேசியா), முனைவர் மலையமான், டி.குணசேகரன் (மலேசியா), முனைவர் ச.முத்துக்குமரன், முனைவர் சீத்தாலட்சுமி( சிங்கப்பூர்), க.சிவகுருநாதப் பிள்ளை (இலண்டன்), முனைவர் செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் (இலங்கை), விசயராணி (சிங்கப்பூர்), சித்திரன் குருசாமி (சிங்கப்பூர்), ஆறு.அஞ்சப்பன் (சிங்கப்பூர்), பா.தியாகராசன் (சிங்கப்பூர்), இ.கோமதிநாயகம், பூபதி (சிங்கப்பூர்) உள்ளிட்டோர் கருத்தரங்க அமர்வுகளில் தலைமை தாங்குகின்றனர்.
முனைவர் சரளா இராசகோபாலன், முனைவர் மலையமான், புலவர் தி.நா.அறிவொளி, முனைவர் து.சேகர், அருள்செல்வன் இராசு (மலேசியா), அ.கவிதா, முனைவர் கி.மைதிலி, மன்னர்மன்னன் (மலேசியா), முனைவர் வேல்முருகன் (சிங்கப்பூர்), பார்வதி கைலாசம், முனைவர் குமரன் (மலேசியா), இராசப்பன் முத்துலட்சுமி (சிங்கப்பூர்), முனைவர் மு.இளங்கோவன் (புதுச்சேரி), முருகையன், தமிழகன், கல்பனா செல்வராசு, கி.சிற்றம்பலம், முனைவர் ப.அனுராதா, முனைவர் சிவகுமாரன் (சிங்கப்பூர்), சா.கல்பனா (தே.கழகம்) உள்ளிட்ட கட்டுரையாளர்கள் கட்டுரை வழங்குகின்றனர்.
பேராசிரியர் இரா.இளவரசு உள்ளிட்ட தமிழறிஞர்கள் உரையாற்ற உள்ளனர்.
நாளை ஆசிரியம் என்னும் நூல் வெளியீட்டு விழாவும் நடைபெறுகிறது. ஆ.சோதிநாதன் (மலேசியா) வெளியிட, சி.சாமிக்கண்ணு (சிங்கப்பூர்) முதற்படி பெறுகிறார். முனைவர் இராசேந்திரன் (மலேசியா) ஏற்புரையாற்றுகிறார்.
பிற்பகல் 4 மணிக்கு நிறைவு விழா. மாநாட்டு நிறைவுரையும் விருது வழங்கலும் முனைவர் கா.மாரியப்பன் (மேனாள் பள்ளிக்கல்வி இயக்குநர்).பதிவு செய்தவர்கள் மட்டும் கலந்துகொள்ளும் நிகழ்வாக இது இருக்கும்.
-
சென்னை மின்தடைக்கு முற்றுப்புள்ளி? கடலூர், நகையில் இருந்து பறந்து வந்த ஸ்பெஷல் டீம்.. குட்நியூஸ் -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
மிக பெரிய ஆபத்தில் சீனா.. இனி என்ன செய்தாலும் ஒன்னுமே மாறாது.. ஆனா இந்தியாவுக்கு பயங்கர லாபம்! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
"AI மனித கட்டுப்பாட்டை மீறும்.." அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? AI நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications