நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் - அஞ்சலிக்கு வராத எம்.பிக்கள்
டெல்லி: நாடாளுமன்றத்தை தீவிரவாதிகள் தாக்கியதன் 7வது ஆண்டு தினத்தையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் 10க்கும் குறைவான எம்.பிக்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றத்தின் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்புப் படையினர் 6 பேர் கொல்லப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தின் 7வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆறு பாதுகாப்புப் படையினரின் படங்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், இரு அவைகளையும் சேர்ந்த 10க்கும் குறைவான எம்.பிக்களே கலந்து கொண்டது அனைவரையும் அதிர வைத்தது.
சில தினங்களுக்கு முன்புதான் மும்பை சம்பவம் குறித்து எம்.பிக்கள் அனல் பறக்க விவாதம் செய்தனர் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு விழாவை பெரும்பாலான எம்.பிக்கள் புறக்கணித்தது அவர்களின் சுய ரூபத்தை தோலுரித்துக் காட்டும் வகையில் அமைந்தது.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications