இன்போசிஸின் 'சிங்கிள் டிஜிட்' ஊதிய உயர்வு!

ஐடி நிறுவனங்கள் வழக்கமாக இரட்டை இலக்கத்தில்தான் அதாவது 13 - 15 சதவீதத்திலான ஊதிய உயர்வை வழங்குவது வழக்கம். ஆனால் தற்போது பொருளாதார நெருக்கடி தலை விரித்தாடி வருவதால் சிங்கிள் டிஜிட் உயர்வுக்கு ஐடி நிறுவனங்கள் மாறியுள்ளன.
டிசிஎஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்கள் இந்த ஒற்றை இலக்க ஊதிய உயர்வு முறையை முதலில் அறிவித்தன. ஊதிய உயர்வைத் தள்ளிப் போட வேண்டும் அல்லது 7-8 சதவீத ஊதிய உயர்வை மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம் என்று அந்த நிறுவனங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் இன்போசிஸும் இந்த ஒற்றை இலக்க உயர்வுக்கு மாறியுள்ளது. அடுத்த நிதியாண்டில், ஊழியர்களுக்கு ஒற்றை இலக்கத்திலான ஊதிய உயர்வை அமல்படுத்தப் போவதாக அது அறிவித்துள்ளது.
இதுகுறித்து இன்போசிஸ் நிறுவனத்தின் மூத்த மேலாளர் சந்தீப் மஹீந்த்ரூ கூறுகையில், வரும் நிதியாண்டில் ஊதிய உயர்வு விகிதம் குறைவாகவே இருக்கும். ஒற்றை இலக்கத்தில்தான் அது இருக்கும். அதிலும் அதிகபட்ச ஒற்றை இலக்க உயர்வாகவும் இருக்கலாம் அல்லது குறைந்தபட்ச ஒற்றை இலக்க உயர்வாகவும் இருக்கலாம். அதை உறுதியாக கூற முடியாது.
வரும் நிதியாண்டில் ஊதிய உயர்வு தொடர்பான பிரச்சினை பெரிதாக இருக்கும் என்றார் அவர்.
இதற்கிடையே, டிசிஎஸ் நிறுவனம் அடுத்த நிதியாண்டில் ஊதிய உயர்வை மேற்கொள்ளாது என்று கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே ஐடி நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை அனுபவித்து வருகின்றன. காரணம், பல வாடிக்கையாளர்கள் புதிய ஐடி புராஜக்ட்களை நிறுத்தி வைத்துள்ளன. அவுட்சோர்சிங்கையும் தாமதப்படுத்தியுள்ளன. இதனால்தான் இந்த நிலை.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
HCL: 200 ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்.. கையைவிட்டு போகும் 2வது அமெரிக்க டீல்.. அதிர்ச்சியில் ஐடி துறை -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications