ஐயப்ப பக்தர்கள் வேடத்தில் மது கடத்தல்
சேலம்: சேலம் அருகே ஐயப்ப பக்தர்கள் வேடத்தில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மதுவைக் கடத்திய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தேவியாக்குறிச்சி ரயில்வே கேட்டில் போலீசார் நின்று கொண்டு அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அய்யப்பன் படத்துடன் ஒரு கார் வந்தது.
அந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது அதில் 2 ஐயப்ப பக்தர்கள் இருந்தனர். காருக்குள் சோதனை போட்டபோது, பெட்டி, பெட்டியாக மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.
அந்த பெட்டிகளில் இருந்த 1,000 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இந்த காரில் இருந்த நம்பர் பிளேட்டும் போலியானது என்பது தெரியவந்தது.
அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரில் இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள்,
கார் டிரைவர் ரங்கநாதன் (27), கார் உரிமையாளர் பிரகாஷ் (37) ஆகியோர் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள்.
இன்னொருவரான சசிக்குமார் நாமக்கள் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர்.
3 பேரும் ஐயப்ப பக்தர்கள் வேடத்தில் புதுச்சேரியிலிருந்து மது பாட்டில்களைக் கடத்தி தூத்துக்குடிக்குச் சென்று கொண்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications