திருமங்கலம் இடைத்தேர்தல் தேமுதிகவுக்கு திருப்புமுனை-விஜய்காந்த்
மதுரை: அதிமுக தொடங்கப்பட்டபோது எம்.ஜி.ஆருக்கு திண்டுக்கல் தொகுதி இடைத்தேர்தல் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது போல திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் தேமுதிகவுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என அக் கட்சியின் தலைவர் விஜய்காந்த் கூறினார்.
திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட தேமுதிகவினர் 40 பேர் விஜய்காந்திடம் விருப்பம் தெரிவித்து மனு கொடுத்துள்ளனர்.
இவர்களிடம் நேர்காணல் நடத்துவதற்காக விஜயகாந்த் இன்று மதுரை வந்தார். கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திய அவர் பின்னர் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினார்.
முன்னதாக நிருபர்களிடம் விஜயகாந்த் பேசுகையில்,
திருமங்கலம் இடைத்தேர் தலில் தே.மு.தி.க. சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன்.
இடைத்தேர்தல் என்றாலே வன்முறை நடக்கத்தான் செய்யும். எல்லோரும் அதனை சந்திக்கத் தான் வேண்டும்.
ஆளும் கட்சியினர் தேர்தலில் வெற்றிபெற எல்லா வேலைகளையும் செய்யத் தான் செய்வார்கள். அதையும் மீறி தேமுதிக வெற்றிக்காக பாடுபடும்.
மதுரை மேற்கு, மத்தி இடைத்தேர்தலின்போது நடந்த வன்முறைபோல் திருமங்கலம் இடைத் தேர்தலிலும் வன்முறை நடக்கக்கூடாது என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கடந்த உள்ளாட்சி தேர்தலில் வன்முறைகள் நடந்தன. மதுரை மத்திய தொகுதி, மேற்கு தொகுதி இடைத் தேர்தல்களில் கூட வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதுகுறித்து புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
திருமங்கலம் இடைத் தேர்தல் ஏன் அவசர கோலத்தில் நடத்தப்பட வேண்டும்?. ஜனவரி 9ம் தேதிக்கு பதில் 29ம் தேதி என அறிவித்திருக்கலாம். கால அவகாசமாவது கிடைத்திருக்கும்.
கடந்த சட்டசபை தேர்தலின்போது திருமங்கலம் தொகுதியில் தேமுதிக 20,000 ஓட்டுகள் வாங்கியது. இந்த முறை அதிக ஓட்டுகள் வாங்கி வெற்றி பெறுவோம்.
மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை முன் வைத்து பிரசாரம் செய்வேன். எனக்கு தொடர்ந்து பல்வேறு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. வேலைவாய்ப்பு முகாம் நடத்தினால்கூட மிரட்டுகிறார்கள். அதற்கு இடம் கொடுக்கக்கூட தடுக்கிறார்கள்.
திமுக மட்டும்தான் நாட்டுக்கு நன்மை செய்கிறது என்று மக்கள் நினைக்க வேண்டும் என்று ஆளும் கட்சியினர் கருதுகின்றனர். மக்களுக்கு தேவையான இதுபோன்ற நல்லது செய்பவர்களை தடுக்கவா முதல்வர் இருக்கிறார்?.
தமிழ்நாடு மக்களை இனியும் கவிதை, கட்டுரைகள் எழுதி ஏமாற்ற முடியாது.
அதிமுக தொடங்கப்பட்டபோது எம்.ஜி.ஆருக்கு திண்டுக்கல் தொகுதி இடைத்தேர்தல் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதுபோல திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் தேமுதிகவுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும்.
இந்த இடைத் தேர்தலைப் போல் பொது தேர்தலும் திடீரென வர வாய்ப்புள்ளது. எப்போது வாய்ப்புள்ளது என்று நான் ஜோதிடம் சொல்ல முடியாது. திடீர் பொது தேர்தல் வருவது நாட்டு மக்களுக்கு நல்லது இல்லைதான். ஆனாலும் ஆட்சிக்கு முடிவு கட்ட விரைவில் பொது தேர்தல் வந்தால் வரவேற்போம்.
திருமங்கலம் தொகுதி தேமுதிக வேட்பாளரை விரைவில் அறிவிப்பேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications