இசட் பிரிவு பாதுகாப்பை நிராகரித்த சிதம்பரம்

நிதியமைச்சரானதில் இருந்து அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இப்போது உள்துறை அமைச்சராகிவிட்டதால் அவரது பாதுகாப்பை இசட் பிரிவுக்கு மேம்படுத்த இன்டெலிஜென்ஸ் பீரோ பரிந்துரைத்தது.
ஆனால், அந்தப் பரிந்துரையை சிதம்பரம் நிராகரித்துவிட்டார்.
ஒய் பிரிவு பாதுகாப்பில் உள்ளவர்களின் வீட்டின் முன் ஒரு ஹெட் கான்ஸ்டபிள் தலைமையி்ல் 4 ஆயுதம் தாங்கிய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். அந்த விஐபி செல்லும் இடமெல்லாம் இவர்களும் செல்வர்.
இசட் பிரிவில் உள்ளவர்களுக்கு ஒரு பைலட் கார், கூடுதலாக ஒரு பாதுகாப்பு வாகனம், மேலும் 4 ஆயுதம் தாங்கிய போலீசார் உடன் செல்வர்.
தனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தேவையில்லை என்று கூறிவிட்ட சிதம்பரம், மேலும் ஒய் பிரிவு பாதுகாப்பில் உள்ளவர்களுக்கு ஒதுக்கப்படும் ஆயுதம் தாங்கிய படையினரின் எண்ணிக்கையையும் குறைக்க உத்தரவிட்டுள்ளார். இதன்படி ஒய் பிரிவில் உள்ளவர்களுக்கு தலா ஒரு ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர் குறைக்கப்படுகிறார்.
சிதம்பரத்துக்கு முன் உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீலுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தரப்பட்டது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட பிரதமருக்கு இணையாக பாதுகாப்போடு சுற்றி வந்தால் பாட்டீல்.
டெல்லியில் மட்டும் 400 விஐபிக்களுக்கு15,000 போலீசார் 24 மணி நேர பாதுகாப்பு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் டெல்லியில் மொத்த போலீசாரின் எண்ணிக்கையே 60,000 தான்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications