அரசு பள்ளி மாணவர் சீருடை மாறுகிறது
சென்னை: வரும் 2010-11ம் கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் சீருடையை மாற்ற பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தனியார் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் சீருடையை அந்தந்த பள்ளி நிர்வாகங்களே முடிவு செய்கின்றன. பெரும்பாலும், தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் பல வண்ணங்களில் சீருடைகளை அணிந்து செல்கின்றனர்.
ஆனால், அரசு பள்ளி மாணவ, மாணவிகளைப் பொறுத்தவரை 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே வண்ண சீருடையைத் தான் அணிந்து வருகின்றனர்.
பெரும்பாலும் காக்கி அல்லது ஊதா நிற பேன்ட் வெள்ளை நிற சட்டை தான் சீருடையாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசே இலவச சீருடையை வழங்கி வருகிறது.
இந் நிலையில் காலத்திற்கு ஏற்றார்போல் சீருடையை மாற்ற வேண்டும் என அரசுக்கு பள்ளிக் கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையி்ல்,
மாணவர்களின் மன நிலையை அறிந்து, காலத்திற்கு ஏற்ப புதிய சீருடைகளை வழங்க முடிவு செய்துள்ளோம். சீருடையின் நிறத்தை மாற்றி, கட்டம் அல்லது கோடுகள் கொண்ட சட்டைகளை மாணவ, மாணவிகளுக்கு புதிய சீருடையாகக் கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.
மாணவிகளுக்கு 'ஸ்கர்ட்' வழங்குவதா அல்லது சுடிதார் வழங்குவதா என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.
புதிய சீருடை மாற்றம் அடுத்த கல்வியாண்டில் அமலுக்கு வராது. 2010-2011ம் கல்வியாண்டில் தான் இது நடைமுறைக்கு வரும் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications