விதிப்படி மீண்டும் ராஜினாமா கடிதம் தரத் தயார்-செல்வப்பெருந்தகை
சென்னை: எனது ராஜினாமா கடிதம் விதிகளின்படி இல்லை என்று தெரிவித்தால் முறைப்படி மீண்டும் கடிதம் அளிக்கத் தயார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்த எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
திருமங்கலம் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் காலியாக உள்ள மங்களூர் தொகுதிக்கு இடைத் தேர்தலை நடத்தவிடாமல் முதல்வர் கருணாநிதி தடுத்துவிட்டதாக வைகோ, விஜய்காந்த் உள்ளிட்டோர் புகார் கூறியுள்ளனர்.
ஆனால், செல்வப் பெருந்தகையின் ராஜினாமா கடிதம் முறையாக இல்லாததால் அவரது ராஜினாமா கடிதம் இன்னும் சபாநாயகரால் ஏற்கப்படவில்லை என்று முதல்வர் கருணாநிதி விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து செல்வப்பெருந்தகை கூறுகையில்,
நான் கடிதம் கொடுத்த அன்றே டைப் செய்து தரக் கூடாது என்றும், கையால் எழுதித் தான் தர வேண்டும் என்றும், ராஜினாமா கடிதத்தை அதற்கென்று உள்ள முறையில் தான் எழுதப்பட வேண்டும் என்றும் சட்டமன்ற அதிகாரிகள் கூறினர்.
ஆனால், முன்பு ஒருமுறை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது ராஜினாமா கடிதத்தை தந்தபோது நானும் அருகில் இருந்தேன். அப்போது அவர் என்ன வழிமுறைகளைப் பயன்படுத்தி கடிதம் தந்தாரே அதே முறையில் தான் நானும் கடிதம் தந்தேன்.
எனினும் விதிகளின்படி கையால் எழுதி இன்னொரு முறை கடிதம் தந்தால் தான் ராஜினாமா ஏற்படும் என்று தெரிவித்தால் அதே முறையில் மீண்டும் ஒரு ராஜினாமா கடிதத்தைத் தரத் தயாராகவே உள்ளேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications