டெங்கு காய்ச்சலுக்கு மாணவி பலி
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே டெங்கு காய்ச்சலுக்கு மாணவி பலியானார்.
குமரி மாவட்டத்தில் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, சிக்கன் குனியா போன்றவை பரவாமல் தடுக்க சுகாதார துறையால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இருப்பினும் நாகர்கோவில் நகர பகுதிகளில் பெருகியுள்ள கொசுக்களின் காரணமாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
கோட்டார் பகுதியில் குழந்தைகள் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோட்டார் முதலியார் விளை பகுதியை சேர்ந்தவர் முகுந்தன். இவரது மகள் சுபிதா. இவர் அந்த பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த ஒரு வாரகாலமாக இவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் சிகிச்சை பலன் இல்லாததை தொடர்ந்து அவரை நாகர்கோவிலில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரி ஓன்றில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அப்போது அவரது ரத்தத்தை பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வநதது.
இதனையடுத்து அவரது ரத்தத்தை மாற்ற வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகளை செயயுங்கள் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர். மாணவியின் உடலில் ரத்தத்தை மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் அதற்கான மருததுவ சிகிச்சையை தொடங்கும் முன்பே மாணவி இறந்துவிட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அருகே மீண்டும் சிக்குன்குனியா:
இதற்கிடையே, கரூர் மாவட்டம், பஞ்சபட்டியில் உள்ள பொது மக்கள் சிலரை சிக்குன்குனியா நோய் மீண்டும் தாக்கியுள்ளதால் அச்சம் அடைந்துள்ளனர்.
பஞ்சபட்டியில் உள்ள பொது மக்கள் சிலருக்கு கடந்த சில நாட்களாக கை வலி, கால் வலி, மூட்டு வலி, கடுமையான காய்ச்சல் போன்றவை ஏற்பட்டுள்ளது.
இதனால் சிசிச்சை பெற சென்ற போது அவர்களை சிக்குன்குனியா தாக்கியிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பயந்து போன அவர்கள் கரூர், திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது சுமார் 500 -க்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். இதனால் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள பொது மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.
தகவல் அறிந்த மருத்துவ குழுவினர் அந்த பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சிக்குன்குனியா காரணமாக, பஞ்சபட்டியைச் சேர்ந்த நபர்கள் பஸ்சில் சென்று வர அருகில் உள்ள கிராம மக்கள் தடை விதித்துள்ளனராம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications