புலிகளின் கடும் தாக்குதலில் 140 ராணுவத்தினர் பலி
புலிகளின் இந்த ஆவேசத் தாக்குதலில் 350க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் படுகாயமடைந்தனர். 26 உடல்களை புலிகள் கைப்பற்றியுள்ளனர்.
இது குறித்து விடுதலைப் புலிகள் இயக்கம் தெரிவித்துள்ளதாவது:
குஞ்சுப்பரந்தனில் இருந்து கிளிநொச்சி நோக்கியும் முறிகண்டியில் இருந்து இரணைமடு நோக்கியும் புலிக்குளத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கியும் மலையாளபுரத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கியும், நான்கு முனைகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் இலங்கை ராணுவம் முன்னேறி வந்தது.
பல குழல் வெடிகணைகள், ஆர்ட்டிலரிகள் மற்றும் கனரக போர்க்கலங்களின் ஆதரவுடன் முன்னேறி வந்த இலங்கைப் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த் தாக்குதலை மேற்கொண்டனர்.
இதை சமாளிக்க முடியாமல் இலங்கைப் படையினர் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டனர். இந்த கடும் தாக்குலில் 130 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 250க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர்.
18 ராணுவ வீரர்களின் உடல்களையும், பெருமளவிலான ஆயுதங்களையும் புலிகள் கைப்பற்றினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கிளாலியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ராணுவ முன்னேற்றத்தை முறியடித்த விடுதலைப் புலிகள் 40-க்கும் அதிகமான இலங்கைப் படையினரைக் கொன்றனர்.
120-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இங்கு எட்டு ராணுவத்தினரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன.
இந்தத் தகவலை ராணுவம் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் புலிகள் தரப்பில்தான் 120 பேர் பலியானதாக அது தெரிவித்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!













Click it and Unblock the Notifications