முக்கிய ராணுவ ஆவணங்களுடன் பாக். உளவாளி கைது
லக்னோ: பாகிஸ்தானைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ. ஏஜென்ட் ஒருவர், ராணுவம் தொடர்பான முக்கிய ஆவணங்களுடன் லக்னோவில் பிடிபட்டார்.
லக்னோவில் உள்ள சர்பாக் ரயில் நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
அவரது பெயர் அப்துல் ஜாபர் என்கிற சிக்கந்தர். பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்தவர். உ.பி. மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ராணுவம் தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
லக்னோ கன்டோன்மென்ட் பகுதியின் வரைபடங்கள், மத்திய ராணுவ கமாண்ட் குறித்த பல முக்கியத் தகவல்கள் உள்ளிட்டவை அவரிடம் இருந்தன.
பாகிஸ்தான் ராணுவ உளவுப் பிரிவால் பயிற்சி அளிக்கப்பட்டவர் சிக்கந்தர். இந்திய விமானப்படை, ராணுவம், கடற்படையின் முக்கிய பகுதிகளில் உளவு பார்க்க சிறப்பு பயிற்சியும் பெற்றுள்ளார்.
தான் சேகரிக்கும் தகவல்களை இன்டர்நெட் மூலமும், தொலைபேசி மூலமும் பாகிஸ்தானில் உள்ள ஐஎஸ்ஐ உயர் அதிகாரிகளுக்கு அவர் வழங்கி வந்துள்ளார்.
2007ம் ஆண்டுக்கு முன்பு வரை சிக்கந்தர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்தார். அதன் பின்னர் அவரைத் தொடர்பு கொண்ட ஐ.எஸ்.ஐ., இந்தியாவில் உளவு பார்க்கும் பணிக்கு அவரை நியமித்தது.
பாகிஸ்தானில் 9 மாத பயிற்சி எடுத்துக் கொண்ட பின்னர் அவர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார். சிக்கந்தரின் குடும்பத்திற்கான அனைத்து செலவுகளையும் ஐ.எஸ்.ஐ.யின் ராணுவ புலனாய்வுப் பிரிவே பார்த்துக் கொள்கிறதாம்.
கடந்த நவம்பர் 15ம் தேதி காத்மாண்டு வழியாக இந்தியாவுக்கு வந்துள்ளார் சிக்கந்தர்.
பல்வேறு ஆசிய நாடுகளில் உளவு பார்த்துள்ள சிக்கந்தர், இந்தியாவுக்கு இதற்கு முன்பு 3 அல்லது நான்கு முறை வந்துள்ளாராம்.
அவரை போலீஸ் ரிமான்ட்டில் எடுத்து தீவிரமாக விசாரிக்க தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications