வன்னி போர் முனையில் இந்தியா உள்ளிட்ட 7 நாட்டு ராணுவ ஆலோசகர்கள் ஆய்வு
கடந்த திங்கள்கிழமை இவர்கள் அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்தியா தவிர அமெரிக்கா, பாகிஸ்தான், ஜப்பான், இங்கிலாந்து, வங்கதேசம், மாலத்தீவு ஆகிய நாடுகளின் ராணுவ ஆலோசகர்களும் இதில் இடம் பெற்றிருந்தனர்.
முதலில் அனைவரும் வன்னியில் உள்ள பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்திற்குச் சென்றனர். பின்னர் ராணுவத்தின் 57வது பிரிவு, 59வது பிரிவு தலைமை அலுவலகங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு வெளிநாட்டு பாதுகாப்பு ஆலோசகர்களுக்கு போர் நிலைமை குறித்து அந்தந்த கமாண்டர்கள் விளக்கம் அளித்தனர்.
மேலும், விடுதலைப் புலிகளுடான போர் ஏன் அவசியம் என்பதையும் அவர்கள் விளக்கினர்.
இந்த விஜயத்தின்போது, உள்ளூரிலேயே இடம் பெயர்ந்த தமிழ் அகதிகள், சரணடைந்த விடுதலைப் புலிகள் ஆகியோரை 7 நாட்டு ராணுவ ஆலோசகர்கள் சந்திக்க வாய்ப்பளிக்கப்பட்டது.
மேலும் இலங்கை அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகளும் விளக்கிக் கூறப்பட்டது.
இதுதவிர சில வெளிநாடுள் அனுப்பிய மனிதாபிமான உதவிகளை இங்குள்ள சில என்ஜிஓ அமைப்புகள் தவறாகப் பயன்படுத்துவதையும், 7 நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்களிடம் இலங்கை அதிகாரிகள் விளக்கிக் கூறினார்களாம்.
இலங்கை பாதுகாப்புத்துறை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்













Click it and Unblock the Notifications