தம்பியுடன் மனைவியின் கள்ளக்காதல் - கோபத்தில் கணவர் விடுத்த வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை: தம்பியுடன், மனைவி கள்ளக்காதலால் கொண்டிருந்ததால், ஆத்திரமடைந்த கணவர்தான், தம்பியை மாட்டி விடுவதற்காக சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக மிரட்டல் விடுத்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த பொறுப்பற்ற நபரைப் பிடிக்க தஞ்சைக்குப் போலீஸார் விரைந்துள்ளனர்.
சமீபத்தில் சென்னை கியூ பிரிவு ஐஜி சங்கர் ஜூவாலின் செல்போனுக்கு ஒரு வெடிகுண்டு மிரட்டல் எஸ்.எம்.எஸ். வந்தது. அதில், சென்னை, திருச்சி, மதுரை, விழுப்புரம், கோவை ஆகிய ஊர்களில் உள்ள ரயில் நிலையங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து காவல்துறை பரபரப்பானது. அனைத்து காவல் நிலையங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இந்த நிலையில் எஸ்.எம்.எஸ். அனுப்பிய செல்போன் எண்ணை வைத்து அது எங்கிருந்து வந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தாம்பரத்தைச் சேர்ந்த வசந்த் என்பவரின் முகவரியில் சிம் கார்டு வாங்கப்பட்டிருந்தது. இதையடுத்து போலீஸார் வசந்தைப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர், இந்த எண் என்னிடம் தற்போது இல்லை. 6 மாதங்களுக்கு முன்பு எனது அண்ணன் செல்வேந்திரனுக்கு நான் வாங்கிக் கொடுத்த எண்தான் இது என்று கூறினார்.
மேலும், தன்னைப் பழி வாங்க செல்வேந்திரன் இதுபோல செய்திருப்பதாகவும் தெரிவித்தார். அதற்கான காரணம் என்னவென்றார், செல்வேந்திரனின் மனைவியுடன், வசந்த் பழகி வந்துள்ளார். இதை செல்வேந்திரன் கண்டித்துள்ளார். இருந்தாலும் இருவரும் கேட்கவில்லை.
இதனால் அவ்வப்போது இந்த எண்ணிலிருந்து வசந்த்தை தொடர்பு கொண்டு சும்மா விட மாட்டேன் என மிரட்டுவாராம்.
எனவே, மனைவியின் கள்ளக்காதலால் ஆத்திரமடைந்து தம்பியைப் பழி வாங்குவதற்காக அவர் மூலம் வாங்கிய சிம் கார்டை வைத்து மிரட்டல் எஸ்.எம்.எஸ். அனுப்பியிருக்கிறார் செல்வேந்திரன் என்று தெரிய வந்துள்ளது.
போலீஸ் தன்னைத் தேடுவதை அறிந்ததும் செல்வேந்திரன் தலைமறைவாகி விட்டார். அவர் தஞ்சாவூரில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரைப் பிடிக்க போலீஸார் தஞ்சை விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications