திருமா, வீரமணியை சேர்க்காதீர்கள்-'கராத்தே'
சென்னை: சுப.வீரபாண்டியன், திருமாவளவன், வீரமணி ஆகியோரை தமிழக முதல்வர் கருணாநிதி இனி சேர்க்கக் கூடாது என்று முன்னாள் துணை மேயரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான கராத்தே தியாகராஜன் கூறினார்.
பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோரின் உருவப் பொம்மைகளை பெரியார் தி.கவைச் சேர்ந்தவர்கள் எரித்ததையடுத்து கோட்டையை நோக்கி ஊர்வலம் செல்ல முயன்ற கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட 200 காங்கிரசார் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து கராத்தே தியாகராஜன் கூறுகையில்,
பெரியார் தி.கவைச் சேர்ந்தவர்களை போலீசார் முன்கூட்டியே கைது செய்ய தவறிவிட்டனர். அவர்கள் சத்தியமூர்த்தி பவன் அருகே வந்து பிரதமர், சோனியாகாந்தி, தங்கபாலு ஆகியோரின் உருவ பொம்மைகளை போலீசாரின் கண் முன்னாலேயே எரித்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை போலீசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததும் கண்டனத்துக்குரியது.
இனி அரசின் பொது நிகழ்ச்சிகளுக்கு சுப.வீரபாண்டியன், திருமாவளவன், வீரமணி ஆகியோரை தமிழக முதல்வர் இனி அழைக்கக்கூடாது. இவர்களை அவர் அழைப்பதால்தான் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் பற்றி இவர்கள் அதிகம் பேசி வருகின்றனர்.
அறிஞர் அண்ணா குறித்து டி.என்.சேஷன் ஒரு புத்தகம் எழுதியதை கண்டித்து 1994ம் ஆண்டு ஆயிரம்விளக்கு காவல் நிலையத்துக்கு முன்பு இப்போதைய முதலமைச்சர் போராட்டம் நடத்தினார்.
அண்ணாவைப் பற்றி குறிப்பிட்டது முதலமைச்சருக்கு துன்பத்தை ஏற்படுத்தியதுபோல எங்கள் தலைவர் ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் நயவஞ்சகமாக படுகொலை செய்தது எங்கள் உணர்வை எவ்வளவு பாதித்திருக்கும்?.
புலி ஆதரவாளர்களின் நடவடிக்கைகளை முதல்வர் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். எந்த காரணம் கொண்டும் வன்முறைக்கு இடம் தரக்கூடாது. ஏற்கனவே ராஜீவ் மரணத்தை கொச்சைப்படுத்திய ஜெயலலிதா, அதற்கான தண்டனையை அனுபவித்தார்.
எனவே, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை முதல்வர் தன்னருகே சேர்க்கவே கூடாது. தமிழக காங்கிரஸ்காரர்களின் உணர்வை முதல்வர் மதிக்க வேண்டும் என்றார்.
-
ராஜ்யசபாவுக்கு செல்லும் ராகுலின் ‘டேட்டா கிங்’.. பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்!












Click it and Unblock the Notifications