கட்டணம் கட்டத் தவறிய மாணவர்களை பஸ் பின்னால் ஓட விட்டு சித்திரவதை
மதுரை: பள்ளி பஸ் கட்டணத்தை செலுத்தத் தவறிய மாணவ, மாணவியரை பள்ளிப் பேருந்துக்குப் பின்னால் ஓடி வரச் செய்த கொடுமை திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவைச் சேர்ந்தவர் ஈஸ்வரி சீனிவாசன். இவர் வத்தலகுண்டு போலீஸில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில், எனது மகன்கள் சுதிர் மற்றும் சிவபாலன் ஆகிய இருவரும் வத்தலகுண்டில் உள்ள சாரதா வித்யாலாயா பள்ளியில் படித்து வருகின்றனர்.
புதன்கிழமையன்று, பள்ளிப் பேருந்துக்கான கட்டணத்தை உரிய காலத்திற்குள் செலுத்தத் தவறியதற்காக எனது மகன்களையும், பள்ளியைச் சேர்ந்த 30 மாணவ, மாணவியரையும், கிட்டத்தட்ட 500 மீ்ட்டர் தொலைவுக்கு, பள்ளிப் பேருந்துக்குப் பின்னால் ஓடி வரச் செய்து பள்ளி நிர்வாகம் கொடுமையான தண்டனையைக் கொடுத்துள்ளது.
பள்ளிக்குப் பின்னால் வைத்து இந்தத் தண்டனையைக் கொடுத்துள்ளனர். இதுகுறித்து பள்ளி முதல்வர் நாகரத்தினம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து பள்ளி முதல்வர் நாகரத்தினம் கூறுகையில், ஈஸ்வரி சீனிவாசன், தனது மகன்களின் பள்ளிப் பேருந்துக் கட்டணமாக இதுவரை ரூ. 8000 கட்ட வேண்டியுள்ளது. இதைக் கட்டாமல் இருப்பதற்காக இவ்வாறு அவதூறான புகாரைக் கூறியுள்ளார். மற்றபடி எங்களது பள்ளிப் பிள்ளைகளை நாங்கள் எந்த வகையிலும் துன்புறுத்தவில்லை. ஈஸ்வரி கூறும் புகார்கள் பொய்யானவை என்று முடித்துக் கொண்டார்.
இதற்கிடையே, பள்ளி வளாகத்தில், கூடிய மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் பஸ்சுக்குப் பின்னால் தங்களது குழந்தைகளை ஓடி வரச் செய்து துன்புறுத்தியதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வத்தலகுண்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் இதுவரை எப்.ஐ.ஆர். போடப்படவில்லை.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications