சத்தியமூர்த்தி பவன் தாக்குதல்: 11 விடுதலைச் சிறுத்தை தொண்டர்கள் கைது
சென்னை: காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனைத் தாக்கிய வழக்கில் இதுவரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று சத்தியமூர்த்தி பவனில் புகுந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதால் காங்கிரஸார் கொதிப்படைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அண்ணா சாலை போலீஸ் நிலையத்தில்,காங்கிரஸ் சார்பில் புகார் தரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தாக்குதல் தொடர்பாக நேற்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தென்சென்னை மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் பச்சை, பகலவன், சாரநாத், ரஜபுத்திரன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று ஐஸ் ஹவுஸ் பார்த்தசாரதி, பூபாலன் என்கிற குட்டி, பாபு, அண்ணா சாலை தர்கா பின்புறம் உள்ள குடிசைப் பகுதியைச் சேர்ந்த சீதாராமன் என்கிற சீராளன், பார்டர் தோட்டம் ராஜா ஆகியோர் இன்று கைதாகினர்.
பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் உருவபொம்மையை எரித்ததாக பெரியார் திராவிடர் கழகத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆனூர் ஜெகதீசன் உள்ளிட்ட அந்த அமைப்பைச் சேர்ந்த 62 பேர் ஏற்கனவே நேற்று கைது செய்யப்பட்டனர்.
இருப்பினும் மத்திய அமைச்சர் இளங்கோவன் மற்றும் தங்கபாலு கொடும்பாவிகளை எரித்ததற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று கைது செய்யப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 6 பேர் மற்றும் பெரியார் திகவைச் சேர்ந்த 62 பேர் ஆகிய 68 பேரும் மாலையில் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications